தமிழ் இரண்டாம் தாள்
(உரைநடை,துணைப்பாடம்,செய்யுள் நயம்பாராட்டல், தமிழாக்கம்,படைப்பாற்றல்,மொழித்திறன்)
நேரம்- 3 மணி மதிப்பெண்கள் : 80
I. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளின் மிகாது விடை எழுதுக. 3x4=12
1. நாடகத் தமிழின் சிறப்பியல்புகளாகப் பரிதிமாற்கலைஞர் கூறுவன யாவை?
2. உலகில் சமரசம் பரவாமைக்குக் காரணங்களாகத் திரு.வி.க. கூறுவன யாவை?
3. கவிதைக்குரிய நல்லியல்புகளைக் கம்பன் உரைக்குமாறு யாங்ஙனம்?
4. ஈகைப் பண்பில் தமிழ்மக்கள் சிறந்து விளங்கிய தன்மையை விளக்குக.
5. நம் முன்னோர்கள் நனிநாகரிகராய் விளங்கிய பான்மையை விளக்குக.
II. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளின் மிகாது விடை தருக. 3x4=12
6. மாடு என்பது செல்வம் போலக் கருதப்படக் காரணங்கள் யாவை?
7. ‘ஆ தெய்வத் தன்மையுடையது’ என்பதனை எடுத்துக்காட்டுக.
8. உவமைகளைக் கையாளும் விதத்திலேயே திருவள்ளுவர் நயமுண்டாகக் குறளமைத்திருப்பதை விளக்குக.
9. ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயம் அமைய மு.வ. தெரிவிப்பன யாவை?
10. தமிழகக் குடைவரைக் கோயில்களைப் பற்றி எழுதுக.
III. பின்வரும் வினாக்களுள் எவையேனும் ஒன்றனுக்கு மட்டும் இருபது
வரிகளின் மிகாது விடை எழுதுக. 1x6=6
11. தமிழ்- உயர்தனிச்செம்மொழி- இத்தலைப்பின்கீழ்ப் பரிதிமாற்
கலைஞர் உரைப்பனவற்றைத் தொகுத்து வரைக.
12. நாடு,சமயம்,சாதி இவற்றை அடிப்படையாகக் கொண்டு சமரச உணர்வினின்று மாறுபடுதல் தவறாம் என்று திரு.வி.க. வாதிடுவதினை
விளக்குக.
IV. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கங்களுக்கு
மிகாமல் விடை எழுதுக. 2x10=20
13. ‘பால்வண்ணம் பிள்ளை’ அல்லது ‘மண்’ என்னும் சிறுகதையைக் கருப் பொருளும், சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக.
அல்லது
‘கிழிசல்’ அல்லது ‘வேலி’ என்னும் கதையில் இடம்பெறும் ஏதேனும் ஒரு நிகழ்சியை நாடகமாக எழுதுக.
14. ‘ஓர் உல்லாசப் பயணம்’ அல்லது ‘மகன்’ என்னும் சிறுகதையில் நும் மனம் கவர்ந்த கதைமாந்தர் குறித்துத் திறனாய்வு செய்க.
அல்லது
மருமகள் மாலதியை,மாமியார் கோமதி,மகள் போல் போற்றியதாகக் கற்பனைக் கதை ஒன்றை நும் கற்பனைக் கதையாக வடிக்கவும்.
அல்லது
‘சட்டை’ என்னும் கதையில் உம்மைக் கவர்ந்த கதாபாத்திரத்தையும்,
கவர்ந்ததற்கான காரணத்தையும் கூறுக.
V. 15. பின்வரும் செய்யுளைப் படித்துணர்ந்து, அதில் அமைந்துள்ள மையக் கருத்தை நயத்துடன் எடுத்துரைத்து, அதில் அமைந்துள்ள எதுகை, மோனை, இயைபு, முரண், அணி, சந்தச்சுவை, உவமை, உருவகம்,
கற்பனை, ஆகியவற்றுள் ஏற்புடையவற்றைச் சுட்டி எழுதுக. 1x10=10
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே.
காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையைப் பொருணைநதி – என
மேவிய யாறு பலவோட்த் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு.
VI. பின்வரும் தொடர்களில் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் தமிழாக்கம் தருக 3x2=6
16. Empty vessels make a person efficient.
17. Face is the Index of the mind.
18. Distance lends enchantment to the view.
19. A smooth tongue and an evil heart.
20. Covet all lose all.
21. Nelson Mandela is the champion of the liberation movement in South Africa.
VII. 22.பின்வரும் பழமொழிகளுள் ஒன்றினை விளக்கும் வகையில், வாழ்க்கை
நிகழ்வில் அமைத்துப் பத்து வரிகளில் எழுதுக. 1x4=4
அ) “அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்”
ஆ) “உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?”
அல்லது
”இயற்கை” அல்லது “குழந்தைத் தொழிலாளர்” என்னும் தலைப்பில் உமது சொந்தப்படைப்பாகக் கவிதை ஒன்றை பத்து வரிகளுக்குள் எழுதுக.
VIII. பின்வரும் வினாக்களுக்கு அடைப்புக் குறிகளுக்குள் குறிப்பிட்டவாறு
விடை எழுதுக. 10x1=10
23. பழங்கள் எல்லாம் அழுகிப்போயிற்று.
(தொடரில் உள்ள வாக்கியப் பிழையைத் திருத்துக)
24. பொது கூட்டத்தில், தலைவரின் அறிவுரை படி தொண்டர்கள் அமைதி காத்தனர்.
(தேவையான இடங்களில் வல்லின மெய்களை இட்டு எழுதுக)
25. பஸ் ஸ்டேண்டில்,பேசஞ்சர்களை,கண்டக்டர் க்யூவில் ஏறும்படி
கூறினார்.
( ஆங்கிலச் சொற்கலப்பை நீக்கி இனிய தமிழில் எழுதுக)
26. கூகை அகவ, கழுதை முழங்கியது.
(மரபுவழூஉச் சொற்களை நீக்கித் திருத்தமாக எழுதுக)
27. அண்மையில் நடந்தத் தேர்வில் கண்ணகித் தேறினாள்.
(தேவையற்ற இடங்களில் அமைந்த வல்லின மெய்களை நீக்கி
எழுதுக)
28. வென்னைப் பாணை உடைந்ததால், கன்னன் அலுதான். (எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக)
29. ‘மரம்’ – ‘மறம்’ அல்லது ’நிரை – ‘நிறை’
(பொருள் வேறுபாட்டை உணர்த்தும் வகையில் தனித்தனி
வாக்கியங்களில் அமைத்தெழுதுக)
30. ஒருத்தன் ஒண்டியாய்ப் போனால் அது ஊர்கோலமா?
(கொச்சையான வழூஉச் சொற்களை நீக்கி எழுதுக)
31. ஸ்ரீ ரங்கம் ; குடமூக்கு
(நல்ல தமிழில் எழுதுக)
32. உலகில் இன்னின்னார்க்கு இன்னின்ன தொழில் என வகுத்த பிரமன்
அவற்றுள் ஒன்றாய் யாசித்தலையும் சேர்த்திருப்பானோ
( பொருத்தமான நிறுத்தற்குறிகளை இட்டெழுதுக).
==============================
Free Code Script
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக