தமிழ் இரண்டாம் தாள்
(உரைநடை,துணைப்பாடம்,செய்யுள் நயம்பாராட்டல், தமிழாக்கம்,படைப்பாற்றல்,மொழித்திறன்)
நேரம்- 3 மணி மதிப்பெண்கள் : 80
I. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளின் மிகாது விடை எழுதுக. 3x4=12
1. தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்ளாத தமிழ்மக்களைப் பரிதிமாற்கலைஞர் கடிந்துரைப்பது யாங்ஙனம்?
2. உலகில் சமரசம் பரவாமைக்குக் காரணங்களாகத் திரு.வி.க கூறுவன யாவை?
3. கீட்ஸ், ஜான் ரஸ்கின், பவணந்தி முனிவர் ஆகியோர் கூறும் கவிதையின் நல்லியல்புகள் யாவை?
4. நம் முன்னோர்கள் நனிநாகரிகராய் விளங்கிய பான்மையை விளக்குக.
5. பழந்தமிழர் மேற்கொண்ட தொழில்களைப் பற்றி எழுதுக.
II. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளின் மிகாது விடை தருக. 3x4=12
6. மக்கள் நாகரிகத்தோடு மாட்டிற்கும் தொடர்புண்டு என்பதைப் பாவாணர் கூறுமாறு யாங்ஙனம்?
7. அறுமுறை வாழ்த்து – விளக்குக
8. செல்வம் நிலைபேறு உடைத்தன்று என்பதை நாலடியார் எங்ஙனம் நயம்பட நவில்கின்றது?
9. முன்னேற்றம் என்பது பற்றி மு.வ. உரைப்பன யாவை?
10. தமிழகக் குடைவரைக் கோயில்களைப் பற்றி எழுதுக.
III. பின்வரும் வினாக்களுள் எவையேனும் ஒன்றனுக்கு மட்டும் இருபது
வரிகளின் மிகாது விடை எழுதுக. 1x6=6
11. தமிழ்- உயர்தனிச்செம்மொழி- இத்தலைப்பின்கீழ்ப் பரிதிமாற்
கலைஞர் உரைப்பனவற்றைத் தொகுத்து வரைக.
12. தமிழர்க்கு ஆவோடு தொன்றுதொட்ட தொடர்பு உண்டு என்பதனைப் பாவாணர் கருத்துகள் வழியே நிறுவுக.
IV. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கங்களுக்கு
மிகாமல் விடை எழுதுக. 2x10=20
13. ‘பால்வண்ணம் பிள்ளை’ அல்லது ‘வேலி’ என்னும் சிறுகதையைக் கருப்பொருளும், சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக.
அல்லது
‘சட்டை’ அல்லது ‘கிழிசல்’ என்னும் கதையில் இடம்பெறும் ஏதேனும் ஒரு நிகழ்சியை நாடகமாக எழுதுக.
14. ‘மகன்’ அல்லது ‘மண்’ என்னும் சிறுகதையில் நும் மனம் கவர்ந்த
கதைமாந்தர் குறித்துத் திறனாய்வு செய்க.
அல்லது
கிட்டு, தமையன் தனக்குச் செய்த உதவிகளை நினைத்து மகிழ்வது போல ஒரு கதை எழுதுக.
அல்லது
உன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாவில், ஏற்பட்ட இடையூறுகள் பற்றியும், அதை நீ களைந்தது போலவும் புனைந்து ஒரு கட்டுரை வரைக.
V. 15. பின்வரும் செய்யுளைப் படித்துணர்ந்து, அதில் அமைந்துள்ள மையக் கருத்தை நயத்துடன் எடுத்துரைத்து, அதில் அமைந்துள்ள எதுகை, மோனை, இயைபு, முரண், அணி, சந்தச்சுவை, உவமை, உருவகம்,
கற்பனை, ஆகியவற்றுள் ஏற்புடையவற்றைச் சுட்டி எழுதுக. 1x10=10
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம்
கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்புறுத்தல்!
- பாரதிதாசனார்.
- பாரதிதாசனார்.
VI. பின்வரும் தொடர்களில் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் தமிழாக்கம்
தருக 3x2=6
16. A Penny saved is a Penny earned.
17. Think everybody alike.
18. Do as a Roman do when you are in Rome.
19. To err is human, to forgive is divine.
20. Birds of the same feather flock together.
21. Students want to join the computer course.
VII. 22.பின்வரும் பழமொழிகளுள் ஒன்றினை விளக்கும் வகையில், வாழ்க்கை
நிகழ்வில் அமைத்துப் பத்து வரிகளில் எழுதுக. 1x4=4
அ) “கூடி வாழ்ந்தால் கோடிநன்மை”
ஆ) “தன் கையே தனக்குதவி”
அல்லது
”மழை” அல்லது “வெண்ணிலா” என்னும் தலைப்பில் உமது சொந்தப்படைப்பாகக் கவிதை ஒன்றை பத்து வரிகளுக்குள் எழுதுக.
VIII. பின்வரும் வினாக்களுக்கு அடைப்புக் குறிகளுக்குள் குறிப்பிட்டவாறு
விடை எழுதுக. 10x1=10
23. கீழே ஒரு பழைய நாணயம் ஒன்று கிடந்தன.
(தொடரில் உள்ள வாக்கியப் பிழையைத் திருத்துக)
24. பள்ளி மாணவர்கள்,பாடத்தை படிக்கும் போது,உச்சரிப்பு பிழையின்றி படிக்க வேண்டும்.
(தேவையான இடங்களில் வல்லின மெய்களை இட்டு எழுதுக)
25. சிட்டி லைஃப் ரொம்ப கம்பர்டபிளாக இருக்குதுன்னு என் ஃபிரண்ட்
சொன்னான்.
( ஆங்கிலச் சொற்கலப்பை நீக்கி இனிய தமிழில் எழுதுக)
26. கோழி கொஞ்ச, கிளி கொக்கரித்தது.
(மரபுவழூஉச் சொற்களை நீக்கித் திருத்தமாக எழுதுக)
27. நீரோச் சோறோ எதுக்கிடைத்தாலும் உண்டுச் செல்வேன்.
(தேவையற்ற இடங்களில் அமைந்த வல்லின மெய்களை நீக்கி
எழுதுக)
28. வெறகு விக்கிர வெலையப் பாத்தியா?
(எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக)
29. ‘அலை’ – ‘அளை’ அல்லது ‘பொரி’ – ‘பொறி’
(பொருள் வேறுபாட்டை உணர்த்தும் வகையில் தனித்தனி
வாக்கியங்களில் அமைத்தெழுதுக)
30. காலம்பற எந்திரிச்சு பல் விளக்கோனும்.
(கொச்சையான வழூஉச் சொற்களை நீக்கி எழுதுக)
31. அதிர்ஷ்டம் ; மித்திரர்
(நல்ல தமிழில் எழுதுக)
32. மக்கள் நாகரிகம் குறிஞ்சி முல்லை மருதம் நகரம் என நான்கு நிலைகளைத் தழுவியது
( பொருத்தமான நிறுத்தற்குறிகளை இட்டெழுதுக).
==============================
Free Code Script
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக