14 பிப்ரவரி, 2011

தமிழ் இரண்டாம் தாள் 2


                                     தமிழ் இரண்டாம் தாள்
               (உரைநடை,துணைப்பாடம்,செய்யுள் நயம்பாராட்டல்,                                              தமிழாக்கம்,படைப்பாற்றல்,மொழித்திறன்)
நேரம்- 3 மணி                                                              மதிப்பெண்கள் : 80
I.       பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளின் மிகாது விடை எழுதுக. 3x4=12
1. நாடகத் தமிழின் சிறப்பியல்புகளாகப் பரிதிமாற்கலைஞர் கூறுவன யாவை?
2. உலகில் சமரசம் பரவாமைக்குக் காரணங்களாகத் திரு.வி.க. கூறுவன யாவை?  
3. கவிதைக்குரிய நல்லியல்புகளைக் கம்பன் உரைக்குமாறு யாங்ஙனம்?
4. ஈகைப் பண்பில் தமிழ்மக்கள் சிறந்து விளங்கிய தன்மையை விளக்குக.
5. நம் முன்னோர்கள் நனிநாகரிகராய் விளங்கிய பான்மையை விளக்குக.
  II.     பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும்                  ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளின் மிகாது விடை தருக. 3x4=12 
   6. மாடு என்பது செல்வம் போலக் கருதப்படக் காரணங்கள் யாவை?
   7.  ‘ஆ தெய்வத் தன்மையுடையது’ என்பதனை எடுத்துக்காட்டுக.
   8. உவமைகளைக் கையாளும் விதத்திலேயே திருவள்ளுவர்                              நயமுண்டாகக் குறளமைத்திருப்பதை விளக்குக.    
   9. ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயம் அமைய மு.வ. தெரிவிப்பன யாவை?
  10. தமிழகக் குடைவரைக் கோயில்களைப் பற்றி எழுதுக.
III. பின்வரும் வினாக்களுள் எவையேனும் ஒன்றனுக்கு மட்டும் இருபது
  வரிகளின் மிகாது விடை எழுதுக.                                     1x6=6
11. தமிழ்- உயர்தனிச்செம்மொழி- இத்தலைப்பின்கீழ்ப் பரிதிமாற்
      கலைஞர்  உரைப்பனவற்றைத் தொகுத்து வரைக.
12. நாடு,சமயம்,சாதி இவற்றை அடிப்படையாகக் கொண்டு சமரச              உணர்வினின்று மாறுபடுதல் தவறாம் என்று திரு.வி.க. வாதிடுவதினை
   விளக்குக.
IV. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கங்களுக்கு         
        மிகாமல் விடை எழுதுக.                                                     2x10=20
  13. ‘பால்வண்ணம் பிள்ளை’  அல்லது ‘மண்’ என்னும் சிறுகதையைக்                கருப் பொருளும்,  சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக.                
                                              அல்லது
  கிழிசல்’ அல்லது ‘வேலி என்னும் கதையில் இடம்பெறும்                                          ஏதேனும் ஒரு நிகழ்சியை நாடகமாக எழுதுக.
 14.  ஓர் உல்லாசப் பயணம் அல்லது மகன் என்னும் சிறுகதையில் நும் மனம் கவர்ந்த  கதைமாந்தர் குறித்துத் திறனாய்வு செய்க.
                                                     அல்லது
    மருமகள் மாலதியை,மாமியார் கோமதி,மகள் போல் போற்றியதாகக் கற்பனைக் கதை ஒன்றை நும் கற்பனைக் கதையாக வடிக்கவும்.
                                                    அல்லது
      ‘சட்டை’ என்னும் கதையில் உம்மைக் கவர்ந்த கதாபாத்திரத்தையும்,
கவர்ந்ததற்கான காரணத்தையும் கூறுக.
V. 15. பின்வரும் செய்யுளைப் படித்துணர்ந்து, அதில் அமைந்துள்ள மையக்          கருத்தை நயத்துடன் எடுத்துரைத்து, அதில் அமைந்துள்ள எதுகை,           மோனை, இயைபு, முரண், அணி, சந்தச்சுவை, உவமை, உருவகம்,
    கற்பனை, ஆகியவற்றுள் ஏற்புடையவற்றைச் சுட்டி எழுதுக.       1x10=10
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
     தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
     சக்தி பிறக்குது மூச்சினிலே.
காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
     கண்டதோர் வையைப் பொருணைநதி – என
மேவிய யாறு பலவோட்த் – திரு
     மேனி செழித்த தமிழ்நாடு.

VI. பின்வரும் தொடர்களில் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் தமிழாக்கம் தருக                                                                                                    3x2=6
        16.  Empty vessels  make  a person efficient.
        17.  Face is the Index of the mind.
        18.  Distance  lends  enchantment  to the view.
        19.  A smooth tongue and an evil heart.
        20.  Covet all lose all.
        21. Nelson Mandela is the champion of the liberation movement  in South Africa.

VII. 22.பின்வரும் பழமொழிகளுள் ஒன்றினை விளக்கும் வகையில், வாழ்க்கை
        நிகழ்வில் அமைத்துப் பத்து வரிகளில் எழுதுக.         1x4=4
        அ)  அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்
        ஆ)  உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
                                     அல்லது
        ”இயற்கை” அல்லது குழந்தைத் தொழிலாளர் என்னும் தலைப்பில் உமது சொந்தப்படைப்பாகக் கவிதை ஒன்றை பத்து வரிகளுக்குள் எழுதுக.

VIII. பின்வரும் வினாக்களுக்கு அடைப்புக் குறிகளுக்குள் குறிப்பிட்டவாறு
        விடை எழுதுக.                                                                   10x1=10
        23. பழங்கள் எல்லாம் அழுகிப்போயிற்று.
        (தொடரில் உள்ள வாக்கியப் பிழையைத் திருத்துக)
        24. பொது கூட்டத்தில், தலைவரின் அறிவுரை படி தொண்டர்கள்                        அமைதி காத்தனர்.
        (தேவையான இடங்களில் வல்லின மெய்களை இட்டு எழுதுக)
        25. பஸ் ஸ்டேண்டில்,பேசஞ்சர்களை,கண்டக்டர் க்யூவில் ஏறும்படி
          கூறினார்.
        ( ஆங்கிலச் சொற்கலப்பை நீக்கி இனிய தமிழில் எழுதுக)
        26. கூகை அகவ, கழுதை முழங்கியது.
         (மரபுவழூஉச் சொற்களை நீக்கித் திருத்தமாக எழுதுக)
        27. அண்மையில் நடந்தத் தேர்வில் கண்ணகித் தேறினாள்.
        (தேவையற்ற இடங்களில் அமைந்த வல்லின மெய்களை நீக்கி
        எழுதுக)
        28. வென்னைப் பாணை உடைந்ததால், கன்னன் அலுதான்.       (எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக)
        29.  மரம்’ ‘மறம்  அல்லது  ’நிரை –  ‘நிறை’
        (பொருள் வேறுபாட்டை உணர்த்தும் வகையில் தனித்தனி
        வாக்கியங்களில் அமைத்தெழுதுக)
        30. ஒருத்தன் ஒண்டியாய்ப் போனால் அது ஊர்கோலமா?
        (கொச்சையான வழூஉச் சொற்களை நீக்கி எழுதுக)
        31. ஸ்ரீ ரங்கம் ;  குடமூக்கு
        (நல்ல தமிழில் எழுதுக)
        32. உலகில் இன்னின்னார்க்கு இன்னின்ன தொழில் என வகுத்த பிரமன்
            அவற்றுள் ஒன்றாய் யாசித்தலையும் சேர்த்திருப்பானோ
        ( பொருத்தமான நிறுத்தற்குறிகளை இட்டெழுதுக).

                           ==============================



Free Code Script

தமிழ் இரண்டாம் தாள் 1


                                தமிழ் இரண்டாம் தாள்
               (உரைநடை,துணைப்பாடம்,செய்யுள் நயம்பாராட்டல்,                                              தமிழாக்கம்,படைப்பாற்றல்,மொழித்திறன்)
நேரம்- 3 மணி                                                                மதிப்பெண்கள் : 80
I.       பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளின் மிகாது விடை எழுதுக.             3x4=12
1.  தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்ளாத தமிழ்மக்களைப்         பரிதிமாற்கலைஞர் கடிந்துரைப்பது யாங்ஙனம்?
2. உலகில் சமரசம் பரவாமைக்குக் காரணங்களாகத் திரு.வி.க       கூறுவன யாவை? 
3. கீட்ஸ், ஜான் ரஸ்கின், பவணந்தி முனிவர் ஆகியோர் கூறும்     கவிதையின் நல்லியல்புகள் யாவை?                             
4. நம் முன்னோர்கள் நனிநாகரிகராய் விளங்கிய பான்மையை      விளக்குக.
5. பழந்தமிழர் மேற்கொண்ட தொழில்களைப் பற்றி எழுதுக.
  II.     பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும்                  ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளின் மிகாது விடை தருக.                 3x4=12 

   6. மக்கள் நாகரிகத்தோடு மாட்டிற்கும் தொடர்புண்டு என்பதைப்                     பாவாணர் கூறுமாறு யாங்ஙனம்?
   7. அறுமுறை வாழ்த்து – விளக்குக
   8. செல்வம் நிலைபேறு உடைத்தன்று என்பதை நாலடியார்                       எங்ஙனம் நயம்பட நவில்கின்றது?
   9. முன்னேற்றம் என்பது பற்றி மு.வ. உரைப்பன யாவை?     
 10. தமிழகக் குடைவரைக் கோயில்களைப் பற்றி எழுதுக.
III. பின்வரும் வினாக்களுள் எவையேனும் ஒன்றனுக்கு மட்டும் இருபது
 வரிகளின் மிகாது விடை எழுதுக.                                                         1x6=6
11. தமிழ்- உயர்தனிச்செம்மொழி- இத்தலைப்பின்கீழ்ப் பரிதிமாற்
        கலைஞர் உரைப்பனவற்றைத் தொகுத்து வரைக.
12. தமிழர்க்கு ஆவோடு தொன்றுதொட்ட தொடர்பு உண்டு                           என்பதனைப் பாவாணர் கருத்துகள் வழியே நிறுவுக.
IV. பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கங்களுக்கு         
        மிகாமல் விடை எழுதுக.                                                            2x10=20
  13. ‘பால்வண்ணம் பிள்ளை’  அல்லது ‘வேலி’ என்னும் சிறுகதையைக்              கருப்பொருளும், சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக.                
                                              அல்லது
  ‘சட்டை’  அல்லது ‘கிழிசல்’ என்னும் கதையில் இடம்பெறும்                                    ஏதேனும் ஒரு நிகழ்சியை நாடகமாக எழுதுக.
 14.  ‘மகன்’ அல்லது ‘மண்’ என்னும் சிறுகதையில் நும் மனம் கவர்ந்த
        கதைமாந்தர் குறித்துத் திறனாய்வு செய்க.
                                                     அல்லது
     கிட்டு, தமையன் தனக்குச் செய்த உதவிகளை நினைத்து மகிழ்வது                போல ஒரு கதை எழுதுக.
                                                     அல்லது
     உன்  பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாவில், ஏற்பட்ட                               இடையூறுகள் பற்றியும், அதை நீ களைந்தது போலவும் புனைந்து  ஒரு         கட்டுரை வரைக.
V. 15. பின்வரும் செய்யுளைப் படித்துணர்ந்து, அதில் அமைந்துள்ள மையக்          கருத்தை நயத்துடன் எடுத்துரைத்து, அதில் அமைந்துள்ள எதுகை,           மோனை, இயைபு, முரண், அணி, சந்தச்சுவை, உவமை, உருவகம்,
    கற்பனை, ஆகியவற்றுள் ஏற்புடையவற்றைச் சுட்டி எழுதுக.        1x10=10

   தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
     சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
  சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
     தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
  கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம்
     கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்
  தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
     சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்புறுத்தல்! 
-      பாரதிதாசனார்.
VI. பின்வரும் தொடர்களில் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் தமிழாக்கம்
தருக                                                                                                            3x2=6
        16. A Penny saved is a Penny earned.
        17. Think everybody alike.
        18. Do as a Roman do when you are in Rome.
        19. To err is human, to forgive is divine.
        20. Birds of the same feather flock together.
        21. Students want  to join the computer course.

VII. 22.பின்வரும் பழமொழிகளுள் ஒன்றினை விளக்கும் வகையில், வாழ்க்கை
        நிகழ்வில் அமைத்துப் பத்து வரிகளில் எழுதுக.                                1x4=4
        அ)  “கூடி வாழ்ந்தால் கோடிநன்மை”
        ஆ)  “தன் கையே தனக்குதவி”
                                     அல்லது
       ”மழை” அல்லது “வெண்ணிலா” என்னும் தலைப்பில் உமது சொந்தப்படைப்பாகக் கவிதை ஒன்றை பத்து வரிகளுக்குள் எழுதுக.



VIII. பின்வரும் வினாக்களுக்கு அடைப்புக் குறிகளுக்குள் குறிப்பிட்டவாறு
        விடை எழுதுக.                                                                               10x1=10
        23. கீழே ஒரு பழைய நாணயம் ஒன்று கிடந்தன.
        (தொடரில் உள்ள வாக்கியப் பிழையைத் திருத்துக)
        24. பள்ளி மாணவர்கள்,பாடத்தை படிக்கும் போது,உச்சரிப்பு                               பிழையின்றி படிக்க வேண்டும்.
        (தேவையான இடங்களில் வல்லின மெய்களை இட்டு எழுதுக)
        25. சிட்டி லைஃப் ரொம்ப கம்பர்டபிளாக இருக்குதுன்னு என் ஃபிரண்ட்
             சொன்னான்.
        ( ஆங்கிலச் சொற்கலப்பை நீக்கி இனிய தமிழில் எழுதுக)
        26. கோழி கொஞ்ச, கிளி கொக்கரித்தது.
        (மரபுவழூஉச் சொற்களை நீக்கித் திருத்தமாக எழுதுக)
        27. நீரோச் சோறோ எதுக்கிடைத்தாலும் உண்டுச் செல்வேன்.
        (தேவையற்ற இடங்களில் அமைந்த வல்லின மெய்களை நீக்கி
        எழுதுக)
        28. வெறகு விக்கிர வெலையப் பாத்தியா?
        (எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக)
        29.  ‘அலை’ – ‘அளை’  அல்லது  ‘பொரி’ – ‘பொறி’
        (பொருள் வேறுபாட்டை உணர்த்தும் வகையில் தனித்தனி
        வாக்கியங்களில் அமைத்தெழுதுக)
        30. காலம்பற எந்திரிச்சு பல் விளக்கோனும்.
        (கொச்சையான வழூஉச் சொற்களை நீக்கி எழுதுக)
        31. அதிர்ஷ்டம் ;  மித்திரர்
        (நல்ல தமிழில் எழுதுக)
        32. மக்கள் நாகரிகம் குறிஞ்சி முல்லை மருதம் நகரம் என நான்கு         நிலைகளைத் தழுவியது
        ( பொருத்தமான நிறுத்தற்குறிகளை இட்டெழுதுக).

                           ==============================

Free Code Script

10 பிப்ரவரி, 2011

தமிழ் முதற்றாள் - முக்கிய வினாக்கள்


                                                         தமிழ் முதற்றாள்

காலம்-3மணி ---------- செய்யுளும், இலக்கணமும் ---------------  மதிப்பெண்கள்-100

அ) பின்வரும் வினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் ஐந்து வரிகள் வீதம் விடை எழுதுக.                             4x2=8
1. ஒறுத்தாரும்,பொறுத்தாரும் எய்துவன யாவை?
2. ‘தம்பிரான் தோழர்’ என்று அழைக்கப்பட்டவர் யார்? காரணம்  யாது?
3. பாஞ்சாலி சபதம் பற்றிச் சிறுகுறிப்பு எழுதுக.
4. அறிவுடையார், அறிவிலார் இயல்பினைச் சுட்டுக.
5. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் யாவை?
6. வரைவுகடாதல் என்றால் என்ன?
ஆ) பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் பத்துவரிகள் வீதம் விடை எழுதுக.                              3x4=12
7. இந்தியர் அனைவரும் எவ்வெண்ணத்தைக் கைக்கொள்ளல் வேண்டும்?                          ஏன் ?
8. புறநானூறு பற்றிக் குறிப்பு வரைக.
9. வினைமேற்சென்ற தலைவனிடம், தூதுவந்த பாணன் தெரிவித்த செய்தி யாது?
10.தலைவன் வரைவு நீட்டித்தவிடத்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியதை விளக்குக.
11. ஒறுத்தார்,பொறுத்தார் குறித்துக் குறள் கூறுவன யாவை?
இ) பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் பத்துவரிகள் வீதம் விடை எழுதுக.                              3x4=12
12. இராஜராஜ சோழனின் வில், வாள்,முரசு,கொடி,குடை குறித்துக் கூறப்பட்டன யாவை ?
13. தென்கரை நாட்டின் வளம் குறித்து முக்கூடற்பள்ளு உரைப்பனவற்றை எழுதுக.
14.சுவடிச் சாலையில் இருக்கவேண்டிய நூல்கள் யாவை?
15.சிக்கனத்தால் வரும் பயன்கள் யாவை?
16.குலசேகர ஆழ்வார் வேண்டுவதும், வேண்டாததும் யாவை?
ஈ) பின்வரும் வினாக்களுள் எவையேனும் ஒன்றனுக்கு மட்டும் இருபது வரிகளில் விடை எழுதுக.                                                                         1x8=8
17. செய்ந்நன்றியறிதல் பற்றி வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
18. கண்ணகியின் சூளுரையும், நகர் மாந்தர் மயங்கிக் கூறியனவும் யாவை ?
19. மூலையில் கிடக்கும் வாலிபனிடம், தாராபாரதி கூறும் அறிவுரைகளைத் தொகுத்து எழுதுக.

உ) பின்வரும் செய்யுளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.                                                                                                        4x1=4
20. ”குருகுமுண்டு தான் மணந்த ஞான்றே ”
அ) இஃது யார் யாரிடம் கூறியது?
     ஆ) இக்கூற்றமைந்த செய்யுளைப் பாடியவர் யார்?
     இ) இவ்வரி இடம்பெற்ற நூல் எது?
     ஈ)   குருகு- என்பதன் பொருள் யாது?
                                                              அல்லது
21. “மதம்பொழி கரிமேல் நாயடா வினை நடத்துமோ?”
     அ) இக்கூற்றைக் கூறியது யார்?
     ஆ) யாரை நோக்கிக் கூறியது?
     இ) இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
     ஈ) கரி- எனக் குறிப்பிட்டது யாரை?
ஊ)  22. “மனிதரெலாம்” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதி, அதன்
      பாவகையையும்  எழுதுக.                                                                                              4+2=6
23. “ உதவி” எனத் தொடங்கும் குறளையும், “தொழில்” என முடியும் குறளையும்      2+2=4               அடிபிறழாமல்   எழுதுக.
எ) 24. எவையேனும் இரண்டு சொற்களுக்கு உறுப்பிலக்கணம் தருக.  2x2=4
     அ) புனைந்தோம்                       ஆ) அறைதல்                            இ) வாழ்த்துவம் 
     ஈ) வந்தனன்                              உ) அறிந்தனை                         ஊ) துறவற்க
25. கீழ்க்கோடிட்ட  தொடர்களுள் ஏதேனும் மூன்றனுக்கு மட்டும் இலக்கணக் குறிப்பு  எழுதுக.                                                                                                                             3 x2=6
     அ) சிறைப்பறவை                                ஆ) நெடுந்தேர்   
    இ)குருகும்                                          ஈ) எற்றா        விழுமம்       
    உ) மதிக்குடை                                         ஊ) விக்கி விக்கி
26. எவையேனும் இரண்டு தொடர்களுக்குப் புணர்ச்சி விதி தருக.                        2x2=4
    அ) சிலம்பொன்று                   ஆ) திண்டிறல்                               இ) நன்னூல்
    ஈ) அறைந்தறைந்து                 உ)பெண்ணரசு                            ஊ) வடமேற்கு
27. பின்வருவனவற்றிற்கு சான்று தந்து விளக்குக.                                                         1x4=4
   பொதுவியல் திணை அல்லது வரைவுகடாதல் துறையை விளக்குக.
28. ”உதவி வரைத்தன்று உதவி உதவி                                                                      1x4=4
      செயப்பட்டார் சால்பின் வரைத்து”
    -இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணியைச் சுட்டி விளக்குக.
                                      அல்லது
உவமை அணி அல்லது எடுத்துக்காட்டு உவமையணியை விளக்குக.

எ) பொருத்துக
                                                                                                         4x1=4
     சொல்                                            பொருள்

29. செட்டு                                                              -கதிரவன்
30. சிந்தை                                                        -நூல்
31. வெய்யோன்                                                 -சிக்கனம்
32. சுவடி                                                          -உள்ளம்                 
                                                                              -அறியாமை.

ஏ. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :                                  16x1=16
         
33. ‘ஒன்றே யென்னின் ’ என்னும் கடவுள் வாழ்த்து வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள
     காண்டம்
     ஆ) சுந்தர காண்டம்
     இ) யுத்த காண்டம்.
34. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்
     அ) அகநானூறு
     ஆ) ஐங்குறுநூறு
     இ) புறநானூறு
35. நற்றிணையைத் தொகுப்பித்தவன்
    அ) ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்
    ஆ) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
    இ) பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி.
36. சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
     அ) பிசிராந்தையார்
     ஆ) பாண்டியன் பரிசு
     இ) குடும்ப விளக்கு.
37. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது
     அ) பழமொழி
     ஆ) திருவள்ளுவமாலை
     இ) நீதிநெறி விளக்கம்.
38. ‘பராய்க்கடன்’ –என்றால்
     அ) வேண்டிக்கொள்ளுதல்
     ஆ) விரும்புதல்
     இ) வணங்குதல்.
39. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர்
  அ) பாரதியார்
  ஆ) பாரதிதாசன்
  இ) கம்பதாசன்
40. ’மருகி’என்பதன் பொருள்
  அ) மகள்
  ஆ) மருமகள்
   இ) அம்மா.
41. சுந்தரன் என்ற பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர்
   அ) அனுமன்
   ஆ) இராவணன்
   இ) இலக்குவன்.
42. சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம்
   அ) ஒரு திங்கள்
   ஆ) ஓராண்டு
   இ) ஒருநாள்.
43. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
   அ) குயில்
   ஆ) மயில்
   இ) சிட்டு.
44. தனயை என்ற சொல்லின் பொருள்
   அ) அம்மா
   ஆ) உடன்பிறந்தாள்
   இ) மகள்.


45. வீரமாமுனிவரின் தாய்நாடு
   அ) தமிழகம்
   ஆ) பிரான்சு
   இ) இத்தாலி.
46. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்
   அ) மதுரைக் கலம்பகம்
   ஆ) நந்திக் கலம்பகம்
   இ) காசிக் கலம்பகம்.
47. பாரதிதாசனின் இயற்பெயர்
  அ) துரைராசு
  ஆ) எத்திராசன்
  இ) சுப்புரத்தினம்.



48. உவமைக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டவர்
  அ) சுப்பிரமணிய பாரதி
  ஆ) சுரதா
   இ) கண்ணதாசன்.
ஐ. கோடிட்ட இடங்களை ஏற்ற சொற்களால் நிரப்புக.                                                   2+2=4
49. அறிவற்றங் காக்கும் …………………. செறுவார்க்கும்
      உள்ளழிக்க லாகா ……………………. .
50. உதவி வரைத்தன் …………….. உதவி
      செயப்பட்டார் ............................... வரைத்து.

                                        ===============================





 
  



Free Code Script

8 பிப்ரவரி, 2011

மேல்நிலை இரண்டாம் ஆண்டு-முக்கிய வினாக்கள்


காலம்-3மணி               மிழ் முதற்றாள்
                                  செய்யுளும்,இலக்கணமும்       மதிப்பெண்கள்-100

அ.பின்வரும் வினாக்களுள் எவையேனும் நான்கனுக்குமட்டும்
ஒவ்வொன்றிற்கும் ஐந்து வரிகள் வீதம் விடை எழுதுக. 4x2=8
1.கம்பரின் பெருமையைச்சுட்டும் தொடர்களைக் கூறுக.
2.பயனில்மூப்பில் பல்சான்றோரிடம் நரிவெரூஉத் தலையார் வேண்டுவன யாவை?
3.பாஞ்சாலி சபதம் பற்றிச்சிறுகுறிப்பு வரைக.
4.அந்தாதி- விளக்குக.
5.எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை இயற்றிய நூல்கள் யாவை?
6.துன்பம் எவ்வாறு சிதறிப்போகுமென்று சுரதா தெரிவிக்கிறார்?
ஆ.பின்வரும்வினாக்களுள்எவையேனும்மூன்றனுக்கு மட்டும்
ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகள் வீதம் விடை எழுதுக. 3x4=12 
7.அறிவுடையாரின் இலக்கணங்களாக வள்ளுவர் கூறுவனவற்றை எழுதுக.
8.தலைவியைச் சந்தித்துச் செல்லும் தலைவனிடம் தோழி வரைவு கடாயவாற்றை விளக்குக.
9.வரத நஞ்சயப்பப் பிள்ளை எக்காரணங்களால் தமிழன்னையை வாழ்த்துவம் என்று கூறுகிறார்?
10.’உண்டுகொல்’-என்னும் முறையில் கண்ணகி வெகுண்டு உரைத்தவை
யாவை?
11.கோலியாத்து தாவீதனைக்கண்டு வெகுண்டு உரைத்தவை யாவை?
இ. பின்வரும்வினாக்களுள்எவையேனும்மூன்றனுக்கு மட்டும்
ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகள் வீதம் விடை எழுதுக.                           3x4=12
12.இராஜராஜ சோழனின் வில்,வாள்,முரசு,கொடி,குடை குறித்துக் கூறப்பட்டன யாவை?
13.தென்கரை நாட்டின் வளம் குறித்து முக்கூடற்பள்ளு உரைப்பனவற்றை
எழுதுக.
14.உவமைக் கவிஞர் சுரதா எவ்வெவெற்றைச் சிக்கனம் எனப் பட்டியலிடுகிறார்?
15.குலசேகர ஆழ்வார் வேண்டுவதும்,வேண்டாததும் யாவை?
16.நயினார் பதத் துணையை நாவில் வைத்துப் போற்றுபவர் ஆஇயத் தக்கனவாய் உமறுப்புலவர் கூறுவன யாவை?
ஈ பின்வரும்வினாக்களுள் ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் ஒன்றனுக்கு மட்டும்,இருபது வரிகளில் விடை எழுதுக.                                            1x8=8
17.பொறையுடைமை என்னும் அதிகாரம் வெளிப்படுத்தும் கருத்துக்களைத்
தொகுத்தெழுதுக.
18.சீதையை அனுமன் கண்டுவந்து கூறிய செய்திகளை இருபது வரிகளுக்கு மிகாது எழுதுக.
19. ‘காடு’ என்ற தலைப்பின் கீழ் கவிஞரேறு வாணிதாசன் உரைப்பனவற்றை எழுதுக.
20. ‘செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப்
பெருந்தெய்வம் வந்தது இதுவென்கொல்’
அ) இவ்வடிகள் யார் கூற்று?
ஆ)வம்பப் பெருந்தெய்வம் யார்?
இ) வந்தது எங்கு?
ஈ)இப்பாடலை இயற்றிய ஆசிரியர் யார்?
                                                            அல்லது
21.  “ நெடுந்தேர் ஊர்மதி வலவ முடிந்தன்று
   அம்மநாம் முன்னிய வினையே ”
அ) இக்கூற்று யாரிடம் கூறப்பட்டது?
ஆ) இக்கூற்று யார் கூறியது?
இ) இச்செய்யுள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
ஈ) ‘வலவ’ –என்பதன் பொருள் யாது?
உ. 22.  “ஒன்றேயென்னின்...” எனத்தொடங்கும் பாடலை எழுதி,அஃது எவ்வகைப் பா என்பதையும் குறிப்பிடுக.                                                                                 4+2=6
 23. “கொன்றன்ன” எனத் தொடங்கும் குறளையும், “நோய்” என முடியும் குறளையும் அடிபிறழாமல் எழுதுக.                                                                                                2+2=4
ஊ. 24 எவையேனும் இரண்டு சொற்களுக்கு உறுப்பிலக்கணம் தருக.
                                                                                                                                              2x2=4
அ).வாழ்த்துவம்        ஆ)தருகுவென்         இ)வாழாள்
ஈ)உள்ளுவர்           உ) கொன்றார்         ஊ) சொல்லுமின்.
25.கீழ்க்கோடிட்ட தொடர்களுள் ஏதேனும் மூன்றனுக்கு இலக்கணக் குறிப்பு எழுதுக.                                                                                                                                              3x2=6
அ) ஓங்கியுயர்       ஆ) என்றடி வாழ்த்துவம்  இ)நல்லாற்றுப் படூஉம்
ஈ) வையகமும்,வானகமும்  உ) நெடுந்தேர்     ஊ) தழீஇ
26.எவையேனும் இரண்டு தொடர்களுக்குப் புணர்ச்சி விதி தருக.                               2x2=4
அ) கருத்தோடிசைத்த    ஆ) பெருங்களிறு             இ) கடுந்திறல்
ஈ) பகலுறை             உ) நின்னருள்                ஊ) தமிழன்னை.
27. பின்வருவனவற்றிற்குச் சான்று தந்து விளக்குக.                                                   1x4=4
 முல்லைத்திணை அல்லது பொருண்மொழிக் காஞ்சி
28. “வாங்கிய ஆழிதன்னை வஞ்சர்ஊர் வந்த தாமென்                                               1x4=4
            றாங்குயர் மழைக்கண் ணீரால் ஆயிரம் கலச மாட்டி”
இவ்வடிகளில் அமைந்த அணியைச் சுட்டி விளக்குக.
                                          அல்லது
உவமை அணி அல்லது சொற்பொருள் பின்வருநிலை அணியை விளக்குக.
எ. பொருத்துக                                                                                                                       4x1=4
            புலவர்கள்                                                      இயற்றிய நூல்கள்
                       
29. சீத்தலைச் சாத்தனார்                                       சிலப்பதிகாரம்
30.திருத்தக்கத்தேவர்                                               வளையாபதி
31.இளங்கோவடிகள்                                                மணிமேகலை
32.நாதகுத்தனார்                                                        சீவகசிந்தாமணி
ஏ. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :                                                         16x1=16
33. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாக்க் கொண்டு
விளங்கும் நூல்
அ) அகநானூறு
ஆ) ஐங்குறுநூறு
இ) புறநானூறு.
34. நற்றிணைப் பாக்களின் அடிவரையறை
அ) 4 அடி முதல் 8 அடி வரை
ஆ) 9 அடி முதல் 12 அடி வரை
இ) 13 அடி முதல் 31 அடி வரை.
35. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு
அ) படலம்
ஆ) இயல்
இ) காதை.
36.கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர்
அ) நக்கீரர்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) இளங்கோவடிகள்.
37.தமிழரசிக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன்
அ) சிவன்
ஆ) திருமால்
இ) முருகன்.
38.சுந்தரர் தேவாரம்
அ) முதலாந்திருமுறை
ஆ) ஏழாந்திருமுறை
இ) பன்னிரண்டாந்திருமுறை.        
39. “நமக்குத்தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்” என்று பாடியவர்
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) பாரதியார்.
40. “திவ்வியகவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர்
அ) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) குமரகுருபரர்.
41.சிறியதிருவடி என்று அழைக்கப்படுபவர்
அ) கருடன்
ஆ) அனுமன்
இ) வீடணன்.
42. புலன் என்னும் இலக்கியவகை
அ) கலம்பகம்
ஆ) பள்ளு
இ) உலா.
43.சாகித்திய அகாதமி பரிசுபெற்ற நூல்
அ) பிசிராந்தையார்
ஆ) பாண்டியன் பரிசு
இ) குடும்ப விளக்கு.
44.தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவன்
அ) சூசைமாமுனிவர்
ஆ) இயேசு பெருமான்
இ) தாவீதன்.
45.சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள்
அ) மூன்று
ஆ) ஆறு
இ) முப்பது.
46.உத்தரவேதம் எனப் பெயர்பெற்றது
அ) புறநானூறு
ஆ) கம்பராமாயணம்
இ) திருக்குறள்.
47.பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
அ) குயில்
ஆ) மயில்
இ) சிட்டு.
48. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி
அ) சதுரகராதி
ஆ) பேரகராதி
இ) அரும்பத அகராதி.
ஐ. கோடிட்ட இடங்களை ஏற்ற சொற்களால் நிரப்புக.                                         2+2=4
49. அறிவற்றங்காக்கும்.................... செறுவார்க்கும்
    உள்ளழிக்க லாகா .................... .
50. எண்பொருள வாகச் செலச் சொல்லித் ....................
    நுண் பொருள் ...................... தறிவு.


                                         ===========================
                     


Free Code Script

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...