23 டிசம்பர், 2010

நான் ஆசிரியர்களால் வளர்ந்தவன் ---சிற்பியின் செதுக்கல்கள்

அண்மையில் தமிழகத்தின் இன்றியமையாத கவிஞரும்,சாகித்திய அகாதமியின் ஒருங்கு இணைப்பாளருமான "சிற்பி" பாலசுப்பிரமணியன் அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.
                     மருத்துவம் படிக்கவேண்டும் என்ற அவரது எண்ணத்தை மாற்றியவர்  அவரது கல்லூரி ஆசிரியர் கவிமணி அப்துல் கபூர் என்பது தெரியவந்தது. கபூர் அவர்கள் ஆங்கிலப் புலமையும் நிரம்பப் பெற்றவர் ஆதலால் இரண்டு மொழிகளிலும் உள்ள நயங்களை சுட்டி தமிழின் பெருமைகளை நன்கு உணர்த்தியிருக்கிறார்.இதன் விளைவே சிற்பி அவர்கள் கவிஞரானது .
                   ஆசிரியரை  பிறகு காண வாய்ப்புக் கிடைக்காவிடினும் ,அவரது கவிதைகளைத் தொகுத்து " அரும்பு" என்ற பெயரில் வெளியிட்டு தனது நன்றிக் கடனைச் செலுத்தியிருக்கிறார் "சிற்பி".....
                    இன்னமும் தன்னை ஆளாக்கிய தனது ஆசிரியரை நினைவில் வைத்துப் போற்றுவது போற்றுதலுக்குரியது ......! வாழ்க அவர்தம் தமிழ்ப் பணி......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...