27 ஜனவரி, 2012

27/01/2012


1. ஈரான் அரசு ஹோர்முஸ் நீரிணையை மூடினால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (IMF) எச்சரித்துள்ளது.
2.  இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முக்கியக் காரணமே, அந்நாட்டின் பொருளாதார நிலைதான் என்று அல்-காய்தா தெரிவித்துள்ளது.
3. தோட்டக்கலைத் துறையில் அதிக விளைச்சல் தரும், உயர் ரக கனகாம்பரம், சவுக்கு மரக்கன்றுகளை கண்டு பிடித்து, சாதனை படைத்த புதுச்சேரி கூடப்பாக்கம் விவசாயி வெங்கடபதிக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
4. தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை கட்டாயமாக்க பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆதரவு தெரிவித்துள்ளார்.
5.  மணிப்பூர் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை வியாழக்கிழமை மாலை முடிவடைந்தது. அங்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.
6.  ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில், பதக்கம் பெறும் அளவுக்கு சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கும் வகையில் ஒரு திட்டத்தை ரூ.1.25 கோடி நிதியில் தொடங்க தமிழக முதல்வர் உத்தரவு.
7. தமிழகப் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8.  நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கும் திட்டத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துதல் போன்ற பணிகளுக்காக ரூ.152.78 கோடியை ஒதுக்கி முதல்வர் உத்தரவு.
9. நேற்று வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்த, குடியரசு தின விழாவில், பயனாளிகள் 136 பேருக்கு ரூ.82 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான,அரசு  நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
10. அடிலெய்டு டெஸ்டில், துணிச்சலாகப் போராடிய இளம் விராத் கோஹ்லி மட்டும், சதம் அடித்து ஆறுதல் தந்தார். தற்போது, இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது.                                                                 -பாரதிஜீவா

Free Code Script

25 ஜனவரி, 2012

25/01/2012


1. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கும். இதனால், செயற்கைக்கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.
2. கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் சிக்கலான உறவே இருந்துள்ளது. எனவே அதை சுமுகமானதாக மாற்றுவது சுலபமான காரியமல்ல என்று, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
3. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இதய நோய் உள்ளவர்களுக்கு போலியான மருந்துகளை அளித்ததில் 67 பேர் உயிரிழந்தனர்.
4.முல்லைப் பெரியாறு அணை தொடர்பான, நீதிபதி ஆனந்த் குழுவின் இறுதி அறிக்கை, பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது
5. தண்டனைக் காலம் முடிந்த பின்னரும், இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்களை விடுவிக்காத, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
6. கன்னியாகுமரி திருவள்ளுர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசுவதற்கு சுற்றுலா அதிகாரிகள் தொல்பொருள் தொல்பொருள் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
7. கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.400 ஆக உயர்த்தி வழங்க,தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
8. திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் இணக்கமான முடிவு ஏற்படாததையடுத்து, மீண்டும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
9. இந்தியாவுக்கு எதிரான 4ஆவது தொடர் மட்டைப்பந்துப் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 335 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
10. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த மகளிர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா- ரஷ்யாவின் எலினா வெஸ்னினா இணை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.                                              
                                                                                                                                       -- பாரதிஜீவா

Free Code Script

24 ஜனவரி, 2012

24/01/2012


1. எகிப்தில், ஹோஸ்னி முபாரக்கின் வெளியேற்றத்திற்குப் பின் நேற்று, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது. 
2.  நாடு திரும்ப உள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்ய, அந்நாட்டு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
3. தேசிய மனித உரிமை ஆணையத்தில், இன்னும் 15 ஆயிரத்து 400 புகார்கள் இன்னும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
4. நடைபாதைகளிலும், திறந்தவெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் படுத்துத் தூங்கும் மக்களுக்கு, இரவு நேர தற்காலிகத் தங்கும் வசதிகளை, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, குறைந்த விலைக்கு கொடுக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக மைய மின் துறை அமைச்சர் சுசீல்குமார் சிண்டே அறிவிப்பு.
6.  இந்திய கடற்படைக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டு குத்தகை அடிப்படையில், ஷ்யா அளித்துள்ளது  இதற்கு 90 கோடி அமெரிக்க டாலரை இந்தியா அளிக்கும்.
7.  சென்னை வெளிவட்டச் சாலைத் திட்டப் பணியின் இரண்டாம் கட்டமாக, நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை சாலை அமைக்க ரூ. 1,075 கோடியை ஒதுக்கீடு செய்து,தமிழகமுதல்வர் உத்தரவு.
8. மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
9. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி - சானியா ஜோடி, காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
10.  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது, கடைசித் தொடர் மட்டைப்பந்துப்போட்டி அடிலெய்ட் நகரில்,இன்று தொடங்குகிறது.
                                                                                                          -பாரதிஜீவா.

Free Code Script

23 ஜனவரி, 2012

23/01/2012


1.  நைஜீரியாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா பொதுச் செயலர் பான் கீ-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. மக்களின் பேராதரவுடன், தான், நாடு திரும்பப் போவதாக, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்,தெரிவித்துள்ளார்.
3. இலக்கிய விழாவில் நான் கலந்து கொள்வதை தடுக்கவே, என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, ராஜஸ்தான் போலீசார் பொய் கூறியுள்ளனர் என, சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார்.
4. பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, பிப்ரவரி 17ஆம் தேதி துவங்கும் என, உச்சநீதிமன்றம் நியமித்த மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் வேலாயுதன் நாயர் தெரிவித்துள்ளார். 
5. தன்னைக் கேலிசெய்த மூன்று இளைஞர்களை காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகா. அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் அவர்கள் மீது புகார் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டனர்.
6.  இந்தியாவில் நடக்கும், இந்திய-அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான "யூத் அபியாஸ்' எனும் கூட்டுப் பயிற்சியில், முதல்முறையாக, அமெரிக்க டாங்குகள் பங்கேற்க உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
7. தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்காக, இந்தக் கல்வி ஆண்டிலேயே 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக தோற்றுவிக்க முதலமைச்சர் உத்தரவு.
8. திருக்குறளை, இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று, சென்னை "தலைநகர் தமிழ்ச் சங்கம்' கோரிக்கை விடுத்துள்ளது.
9.  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரை, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 
10.  5ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 313 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்கா.                   -பாரதிஜீவா

Free Code Script

21 ஜனவரி, 2012

21/01/2012


1.  ஆப்கானிஸ்தானில் உள்ள, நேட்டோ படைகளின் வசதிக்காக, மூடப்பட்டுள்ள பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் சாலையை மீண்டும் திறக்க, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. 
2. அணுஉலைகளின் ஆயுட்காலத்தை, 40 ஆண்டுகளிலிருந்து, 60 ஆண்டுகளாக உயர்த்த, ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், மீண்டும் அணுசக்தியை அதிகரிக்கும் நாடாக, ஜப்பான் மாறுகிறது.
3. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் விரைவில் அனுசரிக்கப்பட உள்ளநிலையில், குஜராத் முதல்வர் நேற்று, நல்லிணக்க உண்ணாநிலை மேற்கொண்டார்.
4.  சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியின் இந்திய பயணம், பாதுகாப்புக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.
5.  நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தினை பொது-தனியார் கூட்டாண்மை அடிப்படையில் ரூ.380 கோடியில் மேம்படுத்த தமிழக முதல்வர்உத்தரவு.
6. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யான ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
7. புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்ற கட்டடத்தின் வடிவமைப்பில் எவ்வித மாற்றத்தையும் செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
8. புதுமையாகவும், மாறுபட்டும் சிந்திக்கும் திறனை  மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டுமென, இஸ்ரோ முதன்மை ஆலோசகர் ஒய்.எஸ். ராஜன் பேசினார்.
9. ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்புத் தர இது தான் சரியான நேரம். அடிலெய்டு டெஸ்டில் இவரை களமிறக்க வேண்டும், என, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வெங்சர்க்கார், கிரண் மோரே ஆகியோர் வேண்டுகோள்.
10. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுக்கு, ஸ்பெயின் வீரர் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முன்னேறினர்.                                                                                   -பாரதிஜீவா

Free Code Script

20 ஜனவரி, 2012

20/01/2012


1. வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க, சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக, இரண்டு ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. இலங்கையில் மனித வளத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 100 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
3. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், இம்மாதம் தாயகம் திரும்பலாம் என்ற தனது திட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்.
4. புதுச்சேரியில், அண்மையில் வீசிய தானே புயலால், வரலாற்றுச் சின்னமான அரிக்கமேடு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
5.  இத்தாலி நாட்டின் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான, கோஸ்டா கன்கார்டியா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களில் 15 பேர், நேற்று இந்தியா திரும்பினர்.
6. மேற்குவங்கத்தில், விரைவுத்தொடர்வண்டியின்,ஒரு பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த ,ரூபாய் 23 லட்சத்தைக் கண்டெடுத்த பெண் துப்புரவு தொழிலாளி, அதை நேர்மையுடன் காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
7.  லோக்ஆயுக்தா நீதிபதி நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு, மனு தாக்கல் செய்துள்ளது
8. சமையல் எரிவாயு சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. எனினும், எரிவாயு கொண்டு வரப்பட்டு,உருளைகளில் நிரப்பித் தர ஒரு வாரம் ஆகலாம்.
9.  கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், பொதுமக்களை பயமுறுத்தி வரும் குரங்குகளைப் பிடிக்க, வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
10. அஜர்பைஜானுக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடரில் 4 ஆட்டங்களிலும் இந்திய மகளிர்அணி வென்று, கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
                                                                                                -பாரதிஜீவா

Free Code Script

19 ஜனவரி, 2012

19/01/2012


1. மியான்மரில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, அந்நாட்டின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகி, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 
2. அமெரிக்க அதிபர் ஒபாமா, சிரிய அதிபர் பஷர் அல் அசாத்,உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
3. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். 
4. பதிமூன்று நாட்களாக நடந்த புத்தக கண்காட்சியில், மகாத்மா காந்தியின் சுயசரிதை நூலான, சத்திய சோதனை 5,000 பிரதிகள் விற்று, தமிழக வாசகர் மனதில் இடம் பிடித்துள்ளது.
5. தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணி, புத்தகப் பை உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய் முதல்வர், அதிக
மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
6.  தமிழக அமைச்சரவையில் 4 பேரின் துறைகள் நேற்று மாற்றப்பட்டன.புதிய கல்வித்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்கிறார்.
7. ரிவாயு சரக்குந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தீர்வு காணும் விதத்தில்,முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
8. கோவை அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகளில் ஒன்றான, குறைந்த கட்டணத்தில் செய்யப்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில், கடந்தஆண்டு 5,861 பேர், பரிசோதனை செய்து பயனடைந்துள்ளனர். 
9.  ரஞ்சி கோப்பையைக் கைப்பற்றுவோம் என தமிழக கிரிக்கெட் அணியின் கேப்டன் லட்சுமிபதி பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார்.
10.  இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் மட்டைப்பந்துஆட்டத்தில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.                               -                        
                                                                                                -பாரதிஜீவா

Free Code Script

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece