1 செப்டம்பர், 2022

பொது அறிவு வினா - விடை

                                                                   பொது அறிவு 

1.பாரதிதாசனின் இயற்பெயர் யாது? சுப்புரத்தினம்
2.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது? மாணிக்கம்
3.சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? இளங்கோவடிகள்
4.காமராசரைக் கல்விக் கண் திறந்தவர்என மனதாரப் பாராட்டியவர் யார் ?  
     .வெ.ராமசாமி
(பெரியார்)
5.
மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது? ஆந்திரப்பிரதேசம்
6.ஈராக் நாட்டின் தலைநகரம்பாக்தாத்
7.இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் பொக்ரான்
8.ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு 1919
9.ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர் சத்ய ஜித்ரே
10.பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர் தாலமி
11.குஜராத் மாநிலத்தின் தலைநகரம் காந்திநகர்
12.இந்தியாவின் மிகப்பெரிய நதி எது? கங்கை
13.ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்? பி.டி.உஷா
14.எலிசா பரிசோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்? எய்ட்ஸ்
15.திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
நவசக்தி
16.உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது? மலேசியா
17.இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? ஞானபீட விருது
18.இராமாயணத்தின் மூலத்தை எழுதியது யார்? வால்மீகி
19.உலகில் மிகப் பழமையான வேதம் எது? ரிக் வேதம்
20.மனித உடலில் காணப்படும் மிகப் பெரிய சுரப்பி – கல்லீரல்
21.இரத்தம் உறையாமல் பாதுகாக்க இரத்த வங்கிகளில் பயன்படுத்தும் வேதிப்பொருள் - சோடியம் சிட்ரேட்
22.
இதயத்தை பாதுகாக்கும் கவசம் -பெரிகார்டியம்
23.
வைட்டமின்கள் A,D,E மற்றும் K யை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் நோய் வைட்டமினோசிஸ்.
24.
சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?    சாலையைக் கடக்க வேண்டும்
25.
கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?  9
26.
காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் எது ?  தமிழ்நாடு
27.
இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா? கார்பெட் தேசிய பூங்கா
28.
ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?
மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்
29.
காமராசரின் பிறந்த நாள் எப்படிக் கொண்டாடப்படுகிறது? கல்வி வளர்ச்சி நாள்
30.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார் ? அமர்த்தியா சென்
31.யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார் ?  பதஞ்சலி முனிவர்
32.
ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்? ஸ்பெயின்
33.உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல் ?
பசிபிக் பெருங்கடல்.
34.
மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்படும்  நாடு எது? பர்மா
35.இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்? சரோஜினி நாயுடு
36.
கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?திருநெல்வேலி
37.
ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்? ஹிரோசிமா மற்றும் நாகசாகி
38.இந்தியாவின் மான்செஸ்டர்என அழைக்கப்படும் நகரம் எது? மும்பை
39.பாகிஸ்தான் நாட்டின்  தலைநகர் எது ? இஸ்லாமாபாத்
40.இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தையின் பெயர் ? ஹர்ஷா
41.
அரபிக் கடலின் அரசி என்றழைக்கபடும் நகரம்  எது ? கொச்சி

42. ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
 
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை
43.
கல்லணையைக் கட்டியவர் யார்? கரிகால் சோழன்
44.யாருடைய பிறந்தநாள், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது?  டாக்டர்.இராதாகிருஷ்ணன்
45.வெண்மைப் புரட்சியின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் யார்? வர்கீஸ் குரியன்
46.
தங்கத்தில் பயன்படுத்தப்படும் 916 எதைக் குறிக்கிறது?
தங்கத்தின் சுத்தத் தன்மை நூற்றுக்கு 91.6 சதவீதம் சுத்தமானது
47.நோபல் பரிசு எந்தத் துறைக்குக் கொடுக்கப்படுவதில்லை ? கணிதம்
48.கிரிக்கெட் எந்த நாட்டின் தேசிய விளையாட்டாக இருக்கிறது? ஆஸ்திரேலியா
49.போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார்? ஜோனஸ் சால்க்
50.
முதன்முறையாக தமிழை ஆட்சிமொழியாக அறிவித்த வெளிநாடு எது? சிங்கப்பூர்
51.மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது? அயர்லாந்து
52.கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ? ராஜஸ்தான்.
53.மாரத்தான் ஓட்டப்பந்தயம் எத்தனை மைல் தூரத்தை கடப்பதாகும்? 26 மைல்.
54.“
தடை செய்யப்பட்ட நகரம்என அழைக்கப்படுவது எது? லாசா
55.இந்தியாவின் மிக உயர்ந்த விருது எது ?  பாரத ரத்னா
56.
பொருளாதாரத்தின் தந்தை எனப்படுபவர் யார்?  ஆடம் ஸ்மித்
57.
இந்தியாவில் பசுமைப்புரட்சி ஏற்படக் காரணமானவர் யார்? எம்.எஸ்.சுவாமிநாதன்
58.
டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்? .ஜவஹர்லால் நேரு
59.சிந்து சமவெளி மக்கள் எந்த கடவுளை வணங்கினர்? பசுபதி
60.தமிழில் புதுக் கவிதையை அறிமுகப் படுத்தியவர் யார்? பாரதியார்
61.கணிதவியலின் தந்தை யார்? ஆர்க்கிமிடிஸ்
62.மூன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற விளம்பரத்தில் தள்ளுபடியின் சதவீதம்?   
      33.33%
63.
உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? சகாரா
64. சிரிக்க வைக்கும் வாயு எது? நைட்ரஸ் ஆக்சைடு
65.
தூங்க வைக்கும் ராகம் எனப்படுவது எது ? நீலாம்பரி
66.
உலகின் மிகச் சிறிய பறவை எது? ஹம்மிங் பறவை
67.
கின்னஸ் புத்தகத்தை வெளியிடும் அலுவலகம் எங்குள்ளது? லண்டன்
68.
மனிதனின் இதயம் எவ்வகைத் தசையினால் உருவாக்கப்பட்டிருக்கிறது? 
       
கார்டியாக் தசை
69.
ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பிற்கு பெயர் என்ன? 
      
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
70. '
செவாலியே' விருதை வழங்கும் நாடு எது? பிரான்ஸ்

71.
சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?        
     
ராஜகோபாலாச்சாரியார்
72. பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்? கல்கி
73. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் யார் ? சமுத்திர குப்தர்
74.
உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது?டென்மார்க்
75. பிற்படுத்தபட்டவர்களுக்கான இட ஒதுக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட    கமிஷன் எது ?      மண்டல் கமிஷன்
76. இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி?   பாக் நீர்ச்சந்தி
77. தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?   நெல்சன் மண்டேலா
78.
இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி எது ? அராமைக்
79.
தமிழ் மொழி எந்த வட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?
    
பிராமி வட்டெழுத்துகள்
80. நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள தொலைவைக் குறிப்பிடப் பயன்படும் அலகு எது?
     
பார்செக்
81.
விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலம் எது?  ஸ்புட்னிக்-1
82.
விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணியின் பெயர் என்ன?
 
வாலன்டினா தெரஸ்கோவா
83.
திண்மப் பொருளை சூடாக்கி நேரடியாக வாயுவாக மாற்றிப் பெறும் முறையின் பெயர் யாது? பதங்கமாதல்
84.
மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது? தென்னாப்பிரிக்கா
85. உலகில் அதிகமான மக்களால் பேசப்படும் மொழி எது? மண்டாரின்
86. ”
உலகின் துன்பத்திற்கு காரணம் - வறுமைஎன்று கூறியவர் யார்? கார்ல் மார்க்ஸ்
87.
அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?  Save Our Soul
88. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைக்கோட்டின் பெயர் என்ன?
     
இராட்கிளிப் கோடு
89. இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கோட்டின் பெயர் என்ன?  தூரந்த் கோடு
90.
ஐரோப்பாவின் நோயாளி  எனப்படும் நாடு எது? துருக்கி
91. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்  எனப்படும் நாடு எது? சுவிட்சர்லாந்து
92. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது? குதிரை
93.
ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக? சார்பியல் தத்துவம்
94.
மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை எது? குக்கு பெர்ரா
95.
உறுப்பு மயக்கமூட்டியாக பயன்படுவது?  பென்சைல் ஆல்கஹால்
96. தக்காளிப் பழத்தில் உள்ள அமிலம் எது? ஆக்ஸாலிக் அமிலம்
97.
வேதிப் பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது எது? கந்தக அமிலம்
98. ரஷ்யாவை  “இரும்புத்திரை நாடு” என்று கூறியவர் யார்? வின்ஸ்டன் சர்ச்சில்
99. காந்தியடிகளை முதன் முதலில் தேசத் தந்தை என்றழைத்தவர் யார்?
     நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ்
100. பாஞ்சாலி சபதத்தை இயற்றியவர் யார்? பாரதியார்

3 மே, 2022

எழுத்தாளர் சுஜாதா பிறந்தநாள்

 

(என் மனங்கவர்ந்த எழுத்தாளர்)
            எழுத்தாளர், வசனகர்த்தா , பொறியியலாளர் என பல முகங்கள் சுஜாதாவுக்கு உண்டு.
            ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் சுஜாதா 1954-ல் செயின்ட். ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி பிசிக்ஸ் படித்தார். இங்கு இவருடன் சேர்ந்து படித்த நபர் யார் தெரியுமா? மாணவர் மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா அவர்கள்.
            பிறகு, எலக்ட்ரானிக் என்ஜினியரிங்கை எம்.ஐ.டி-யில் பயின்றார். இதே சமயத்தில் தான் டாக்டர் அப்துல் கலாம் ஐயா ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் பயின்றார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்கள்.



            இன்று நம் நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் பிரபலமாக இருக்கும் "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்" (Electronic Voting Machine), மற்றும் VVPAT போன்றவை சுஜாதா
BEML நிறுவனத்தில் பணியாற்றிய போது,கண்டறியப்பட்டவையே என்பது நம்முள் எத்தனை பேருக்குத் தெரியும்?

        அவரது புத்தகங்கள், கதைகள் போன்றவற்றுக்கு இன்னமும் மிகப்பெரிய மவுசு இருக்கிறது. சுஜாதா கதைகளில் கணேஷும் வசந்தும் வெவ்வேறு வடிவங்களில் வருவார்கள்.அவரது வசனங்கள் இன்னமும் மீம்களில் வாழ்கின்றன. தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் கொண்டாடப்பட்டவர் இவராகத்தான் இருக்க முடியும்.
            அவர் இளைஞர்களுக்குச் சொன்ன 10 கட்டளைகள் மிகப் பிரபலமானவை. அவற்றை நினைவுகூர்வோமா?
1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை,உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்துபாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் 100 கிராம் காப்பி பவுடர் (அ)ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
3. மூன்று மணிக்குத் துவங்கும் மதிய ஷோ போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண வேண்டிவரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம்,ஒளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காக விரயம் செய்யாதீர்கள்.
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில்,யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல்.
6. இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமைபெற்ற நீங்கள், இந்திய ஜனத்தொகையின் ஆறு சதவிகித மேல்தட்டு மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.
8.எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால், எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றிவியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும்.பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப்போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
10. படுக்கப்போகும் முன் 10 நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவதுதான்.
            இந்த 10 இல் தினம் ஒன்று என்று முயற்சிசெய்துதான் பாருங்களேன்...

24 மார்ச், 2022

உலக காசநோய் தினம் (மார்ச் 24)

     உலகில் வேகமாக பரவும் நோய்களில் காசநோய் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக அளவில் இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

     ஒவ்வொரு நாளும், 4000 பேர் காச நோயினால் இறந்துவிடுகிறார்கள். மனிதனின் நகம், தலைமுடி தவிர மற்ற பாகங்களில் இந்நோயின் தாக்கம் உள்ளது. குறிப்பாக, நுரையீரல் புற்றுநோயே, பலரின் இறப்புக்குக் காரணமாகிறது.

    சிகிச்சை நல்ல பலன் அளிக்கும் என்பதனைப் போல் சிகிச்சை இன்மை ஆபத்தான விளைவுகளையும் அளிக்கும் என்பதனை உணர்த்துவதும் ‘உலகக் காச நோய் தினத்தின்’ நோக்கம் ஆகும். 

    இந்நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் பெயர் "பையோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ்" என்பது ஆகும். உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் எண்ணத்துடன் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

 உலக காசநோய் நாள் உலக சுகாதார அமைப்பினால்   அதிகாரப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் எட்டு உலகளாவிய பொதுநலனுக்கான நாள்களில் ஒன்றாகும். உலகச் சுகாதார நாள், உலகக் குருதிக் கொடையாளர் நாள், உலக நோய்த்தடுப்பு வாரம், உலக மலேரியா நாள், உலகப் புகையிலை எதிர்ப்பு நாள், உலகக் கல்லீரல் அழற்சி நாள், உலக எயிட்சு நாள் ஆகியவை ஆகும். 

 காச நோய் அறிகுறிகள்: 

1. இரண்டு வாரத்திற்கு மேல், இருமல், காய்ச்சல்
2. சளியுடன் கூடிய இருமல்
3. இருமும்போது சளியுடன் ரத்தம் வெளியேறுதல்
4. பசியின்மை
5. எடை குறைதல்
6. இரவில் வியர்வை 

 சிகிச்சை:  'மான்டோ’ பரிசோதனை மூலம் காச நோய் கிருமித் தொற்றைக் கண்டறியலாம். பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்தால் அவர்களுக்குக் காச நோய் உள்ளது என்று அர்த்தம். இவர்களுக்கு, மேலே சொன்ன அறிகுறி இருந்தால், உடனடியாகச் சிகிச்சை எடுக்க வேண்டும். முறையான, சரியான நேரத்தில் பரிசோதனை, 6 மாதத் தொடர் சிகிச்சை, சத்தான உணவுகள் மூலம், இந்நோயிலிருந்து மீளலாம்.

காசநோயாளிகள் தவிர்க்க வேண்டிய பொருள்கள் 

காசநோயாளி, பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம் அல்லது மற்ற போதை தரக்கூடிய பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.

காச நோய் - செய்யவேண்டியதும் மற்றும் செய்யக்கூடாததும் 

செய்யவேண்டியவை

  • மூன்று வாரங்களோ அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இருமல் இருந்தால் சளி பரிசோதனை செய்யவேண்டும். இந்த பரிசோதனை இலவசமாக அரசு சளி நுண்ணுயிர் மையத்தில் செய்யப்படும்.
  • அனைத்து மருந்துகளையும் தொடர்ந்து முழுகால அளவுகளுக்கு எடுக்கவேண்டும்.
  • டி.பி. குணப்படுத்தக்கூடியது என்பதை புரிந்து கொள்ளவும்.
  • தும்மல் மற்றும் இருமல் ஏற்படும் பொழுது கைக்குட்டையை உபயோகப்படுத்தவும்.

செய்யக்கூடாதவை

  • மூன்று வாரங்களோ அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இருமல் இருந்தால் மருத்துவ உதவியை தவிர்க்க கூடாது.
  • டி.பி.-யை கண்டுபிடிக்க எக்ஸ்ரேயை மட்டும் சார்ந்து இருக்கக்கூடாது.
  • மருத்துவர் அனுமதியில்லாமல் மருந்துகளை நிறுத்தக்கூடாது.
  • டி.பி. நோயாளிகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது.
  • கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது.

12 மார்ச், 2022

உலக சிறுநீரக தினம்

 


சிறுநீரகம் காக்கப் பத்துக்கட்டளைகள்:

உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். நாள் ஒன்றுக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே. உப்பு நிறைந்த ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக் கண்டம், சமையல் சோடா, வடாம், வத்தல், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், பாலாடைக்கட்டி, புளித்த மோர், சேவு, சீவல், சாக்லேட், பிஸ்கட், 'ரெட் மீட்' என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்.

சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விட வேண்டும்.

தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க வெளி உறுப்புகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

மது அருந்தாதீர்கள்.

தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்.

புகை பிடிக்காதீர்கள்.

தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

3 மார்ச், 2022

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்தநாள்

      அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக , இவர் கொண்டாடப்படுகிறார்.


     தனது இளமைப் பருவத்தில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்." இவரது தாயாரும் மனைவியும் செவிப்புலன் குறைவுடையவர்கள். இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம்.இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

     கிரகாம்பெல்லின் கடந்த கால அனுபவம்தான் டெலிபோனை உருவாக்கப் பயன்பட்டது. இவர் 1874ல் இரும்பு மற்றும் காந்தத்தை பயன்படுத்தி ஒரு மின்சுற்றை உருவாக்கி, பின் மின்சாரம் இல்லாமல் காந்தத்தை பயன்படுத்தி ஒலியை அதிர வைத்தார்.

     1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் " வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்."(Watson, come here, I want to see you) என்பதுதான். இந்தச் சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

      ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார். பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார்

       பெல்லுக்குப் புத்தாக்க உரிமை வழங்கப்பட்ட பின்பு, மிக விரைவிலே அவர் பிலடெல்பியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் மக்கள் பேரார்வம் கொண்டனர். இவரது கண்டுபிடிப்பிற்குப் பரிசும் கிடைத்தது. எனினும், இந்த கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,000,000 டாலருக்கு ‘Western union telegraph company’ என்ற நிறுவனத்திற்கு வழங்க பெல் முன் வந்தபோதும், அதை வாங்க அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. 

       அதனால் பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877 ஆம் ஆண்டு, தங்களுடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இதுதான் இன்றைய ‘அமெரிக்க Telephone மற்றும் Telegraph company’ இன் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாக பெருமளவில் வணிகமுறையில் வெற்றிகிட்டியது. இவர் நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப்பெரிய தனியார் வணிக நிறுவனமாகத் திகழ்கிறது.

      இந்தக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி நாம் பேசும் ஒலிஅலைகளை, காந்த அலைகளாக மாற்றி, மீண்டும் ஒலியாக மாற்றினார். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டெலிபோனை உருவாக்கினார். கிரகாம்பெல் வாழ்க்கை குறிப்பு:-

* 1876ல் டெலிபோன் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெற்றார்.

* 1877ல் “பெல் டெலிபோன்’ கம்பெனியை உருவாக்கினார்.

* 1879ல் இது பிரிட்டன் டெலிபோன் நிறுவனத்துடன் இணைந்தது.

* 1880ல் “அமெரிக்கன் பெல் டெலிபோன் கம்பெனி’ என மாற்றப்பட்டது.

* 1881 ஜனவரியில், 25 தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் பெல் இணைந்து ஓரியன்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை உருவாக்கினர்.

* 1922 இல் கனடாவில் உள்ள நோவல் நகரில் கிரகாம்பெல் இறந்தார்.

     தொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாக பெல் ஒரு பணக்காரராக ஆனபோதிலும் அவர் தமது ஆராய்ச்சியைக் கைவிடவில்லை. வேறு பல சாதனங்களையும் அவர் கண்டுபிடித்தார். அவர் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டுடிருந்தார். 

        1882 ஆம் ஆண்டில் பெல் அமெரிக்க குடிமகன் ஆனார். கிரகம்பெல் தனியாக மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்களைக் கண்டுபிடித்தார். 

உலகக் காட்டுயிர் தினம் (World Wildlife Day)

      அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவர இனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வோராண்டும், மார்ச் 3 அன்று உலகம் முழுவதும் உலகக் காட்டுயிர் தினம் (World Wildlife Day) அனுசரிக்கப்படுகிறது. 

    2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஐ. நா நடத்திவருகிறது.

       காட்டுயிர்களைச் சுரண்டுவது என்பது 130.000 – 70.000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் வெளியேறிய காலத்தில் இருந்தே மனிதனின் குணவியல்பாக இருந்துவருகிறது. உலகம் முழுவதும் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களின் அழிவு விகிதம் கடந்த சில நூறு ஆண்டுகளாக மிகவும் அதிகமாக இருக்கிறது. இதனால் நாம் இந்த உலகில் ஹோலோசீன் பெருமளவு அழிவு எனப்படும். 

      ஆறாவது பெரும் அழிவு நிகழ்வில் இருப்பதாகப் பரவலாகக் கருதப்படுகிறது. காட்டுயிர் அழிப்பு எப்பொழுதும் குறிப்பிட்ட இனங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதில்லை. எனினும் பூமி முழுவதும் எண்ணற்ற இனங்களின் குறிப்பிடத்தக்க இழப்பு, காட்டுயிரை அழித்தலின் திறனாய்வில் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. 

    திரும்பக்கிடைக்காத வன எண்ணிக்கைகளுக்கு சேதம் விளைவித்தலின் நிலையாக இந்த அழிவு இருக்கிறது. அதிகப்படியாகக் கொல்லுதல், இருப்பிடத்தை அழித்தல் மற்றும் துண்டாக்குதல், அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களின் தாக்கம் மற்றும் தொடர் அழிவு உள்ளிட்ட நான்கு மிகவும் பொதுவான காரணங்கள் காட்டுயிரை அழித்தலுக்கு வழிவகுக்கின்றன.

     காட்டில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் அதனைச் சுற்றி வாழும் மற்ற உயிர்களுடன் உட்சுற்றுப் பிணைப்பைக் கொண்டுள்ளன. நீர்யானை போன்ற பெரிய தாவர உணவு உண்ணி விலங்குகளில், நீர் யானையில் வளரும் பல ஒட்டுண்ணி பூச்சிகளை பூச்சியுண்ணுகின்ற பறவைகள் உணவாக உட்கொள்கின்றன. இந்த நீர்யானையானது இறப்பதற்கும் கூட இந்தப் பறவைகளின் கூட்டம் காரணமாகிவிடுகிறது. 

       மேலும் இது பறவைகளைச் சார்ந்திருக்கும் மற்ற இனங்கள் பாதிக்கப்படுவதன் மூலமாக தொடர்ந்து அழிவுக்கு வழிவகுக்கிறது. டோமினோ விளைவு எனவும் குறிப்பிடப்படும் இந்தத் தொடர் விளைவுகளின் தொடர்ச்சி, சூழ்நிலையியல் சமூகத்தில் ஏற்படக்கூடிய மிகவும் அழிவு ஏற்படுத்தக்கூடிய செயல்பாட்டிற்கு வெகுதொலைவில் இருக்கிறது. மற்றொரு எடுத்துக்காட்டாக இந்தியாவில் காணப்படும் இரட்டைவால் குருவிகள் மற்றும் உண்ணிக் கொக்குகள், கால்நடைகளின் உடல் மேற்பகுதியிலிருப்பவற்றை உண்கின்றன. 

     அதனால் அவற்றை கிருமி நீக்கம் செய்யப்பட்டவையாக இருக்க விடுகின்றன. ஒரு வேளை நாம் இந்தப் பறவைகளின் இருப்பிடங்களை அழித்தால் அதனால் கால்நடைகளின் எண்ணிக்கையில் இழப்பு ஏற்பட ஏதுவாகலாம். ஏனெனில் அவற்றால் சில நோய்கள் பரவ வாய்ப்பு ஏற்படலாம். பாம்புகளை அழிப்பதால்,எலிகளின் எண்ணிக்கை பெருகி, உணவுப்பஞ்சம் ஏற்படலாம். பறவைகளைக் கொல்வதால், பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.தவளைகளின் அழிவு கொசுக்களின் எண்ணிக்கைப் பெருக்கம்.


    எனவே உயிர்களுக்கிடையே உள்ள பிணைப்பு, உணவுச் சங்கிலியின் இன்றியமையாமை ஆகியவற்றை அறிந்து., வன உயிர்களைக் காப்பது இப்பூவுலகில் வாழும் ஒவ்வொருவரின் கடமையாகிறது.


1 மார்ச், 2022

தினமணி ஏ.என்.சிவராமன்

 தினமணி ஏ.என்.சிவராமன்

    சிவராமன் திருநெல்வேலி மாவட்டத்துக்காரர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ள ஆம்பூர் இவரது சொந்த ஊர். இவர் ஆரம்பக் கல்வியை எர்ணாகுளத்தில் பயின்றார். பின்னர் தம் சொந்த ஊரான ஆம்பூருக்குக் குடிபெயர்ந்து, உயர்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி பள்ளியில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்றபோது, அப்போது மகாத்மா காந்தி சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் (1921) கலந்து கொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். மகாத்மாவின் அழைப்பை ஏற்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். அதனால் அவருக்கு பதினெட்டு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதன் காரணத்தால் அவருடைய கல்லூரி படிப்பு தடைப்பட்டது.

    சிறைத் தண்டனைக்குப் பின் சிவராமன் முன்னணி தமிழ் பத்திரிக்கையாளரான டி. எஸ். சொக்கலிங்கத்தின் தலைமையில் 'காந்தி' பத்திரிகையில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் ராஜாஜியின் வேதாரண்ய உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்பதற்காக பத்திரிக்கை வேலையை கைவிட்டார். மீண்டும் சிறை சென்ற சிவராமன் இருபது மாதங்களில் விடுதலையானார். விடுதலையான சிவராமன் 'காந்தி ' பத்திரிக்கையில் மறுபடியும் பணியில் சேர்ந்தார்.    

    1934 ஆம் ஆண்டு தினமணி இதழ் ஆரம்பிக்கப்பட்ட போது, சொக்கலிங்கம் ஆசிரியராகவும் ஏ.என்.சிவராமன் உதவி ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தார்கள். 1944 இல் சொக்கலிங்கம் தினமணியை விட்டு வெளியேறியபோது, ஏ.என்.சிவராமன் தினமணியின் ஆசிரியராக ஆனார். அதன் பின்னர் தொடர்ந்து 44 ஆண்டுகள் 1987 வரை, தினமணி பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

    'கணக்கன்', 'ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி', 'குமாஸ்தா', 'அரைகுறை வேதியன்', ‘அரைகுறை பாமரன்(அகுபா) போன்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறார்.

    தீவிர காங்கிரஸ்காரர், மேலும் காமராசரின் பற்றாளராகத் திகழ்ந்தார். இருந்தபோதும், 1967 தேர்தலை ஒட்டிய காலகட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக சிவராமன் எழுதிய கட்டுரைகள் ஆட்சி மாற்றத்திற்கு உதவியதாக அறிஞர் அண்ணாதுரை குறிப்பிட்டிருக்கிறார்.

    மொழிகளைக் கற்பதிலும், புத்தக வாசிப்பிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட சிவராமன் தனது 93ஆவது வயதில் புதுக்கல்லூரி பேராசிரியர் உதவியுடன் அராபிய மொழியையும் கற்றிருக்கிறார்.

    பத்திரிக்கையாளனாக இருப்பதற்கு விருது இடையூறாக இருந்து விடக்கூடாதென்பதற்காக நடுவண் அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் ஆகியவற்றை ஏற்க மறுத்து விட்டார். ஆனால், திருக்கோவிலூரில் 'கபிலர் விருதை'யும், பத்திரிக்கைப் பணியை பாராட்டி அளிக்கப்பட்ட பி.டி.கோயங்கோ (1988) விருதையும், அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற விருதையும் (நிறுவியவர் வா.செ.குழந்தைசாமி) ஏற்றுக் கொண்டார்.

    இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் ஆக்கப் பணி விருதைப் பெற்றுள்ளார்.

படைப்புகள்

சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணயம்

ரஷ்யப்புரட்சி 17 ஆண்டு அனுபவம்

இந்தியாவின் வறுமை பற்றி கணக்கன் ஆராய்ச்சி

அப்பல்லோ கண்ட விண்வெளி விஞ்ஞானம்

சுதந்திரப் போராட்ட வரலாறு

மேற்கோள்கள்

28 பிப்ரவரி, 2022

தேசிய அறிவியல் நாள்

     சர்.சி.வி. ராமன் தன்னுடைய புகழ்மிக்க 'ராமன் விளைவு' குறித்து 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி உலகிற்கு அறிவித்த நாள். அவரின் இந்தக் கண்டுபிடிப்புக்கு 1930 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் நாளாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 

     ''ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்'' என்ற ராமன் சிறுவயதில், அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார். 

     மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன. 

     இந்தியாவில் அறிவியல் வேலைவாய்ப்புகள் குறைவாகவே இருந்த காலத்தில், கொல்கத்தா சென்று நிதித் துறையில் வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே பயன்படுத்திக்கொண்டார்.

     ஒருநாள், 'பவ்பஜார்’ எனும் பகுதியின் வழியாகச் சென்றபோது, 'இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்து,  முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார். 

     அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். 

    இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, 'இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.

     மெடிட்டரேனியன் கடல் (Mediterranean Sea) என்று சொல்லப்படும் நடுநிலக் கடல் வழியாகப் பயணம் சென்றபோது, 'கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன். இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். 'அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். 

    அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார். ராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடு இணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின் பெயரையே முன்னிலைப்படுத்தி வெளியிடுவார். ''அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே'' என்பார். 

    அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார். ''கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே, ''கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு. வெறும் யூகங்களை வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே'' என்றார் ராமன். 

     ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். 

                                            அங்கே சென்றவர், 

''ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்"

                 என்று கம்பீரமாக ஆரம்பித்தே தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...