இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதி ஆண்டுதோறும் நாடு முழுவதும் தேசிய நல் ஆளுகை (Good Governance Day) தினமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும், வெளிப்படையான, பொறுப்புடைய நிர்வாகத்தை வழங்குவதில் அரசாங்கத்திற்கு உள்ள நிர்வாக அர்ப்பணிப்பைப் பற்றி மக்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தரநிலைப்படுத்துவதற்காகவும், நாட்டு மக்களுக்கு அதிகத் திறனுடைய, பொறுப்புடைய நிர்வாகத்தை வழங்கிடும் வகையில் அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நிர்வகிப்பில் அரசுக்கு உள்ள பொறுப்புடைமையைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை அதிகரித்து அதன் மூலம் வாஜ்பாய் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக 2014 ஆம் ஆண்டு இத்தினம் தோற்றுவிக்கப்ட்டது.
1. இந்தியா இப்போது அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. ”நம்மிடம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கான தகுதி இருக்கிறது. நாம் அதை ஒரு போதும் ஆத்திரத்திற்காக பயன்படுத்த மாட்டோம்” என்று கூறியவர் வாஜ்பாய். உலக நாடுகளின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு, இந்தியா, போக்ரான் அணு குண்டு சோதனை செய்த பின்பு வாஜ்பாய் சொன்ன வார்த்தைகள் இவை.
2. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட புதிய தொலை தொடர்பு கொள்கை (NTP - New Telecom Policy) இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியை 3% லிருந்து 70% அளவிற்கு (2012) உயர்த்தியது. இந்தச் சாதனை ”தொலைத் தொடர்புத் துறையில் ஒரு புரட்சி” எனப்படுகிறது.
3. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில்தான் "கல்விபெறுவதற்கான உரிமைச் சட்டம்" (RTE) என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இது இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானது. இதனால் பலர் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றனர். கல்வித் துறையில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாக இன்று வரை பார்க்கப்படுகிறது.
4. வாஜ்பாய் ஆட்சியின் கீழ் தான் கார்கில் போரை எதிர்கொண்டது இந்தியா. அதே போல 1999, 2000 ஆம் ஆண்டுகளில் இரண்டு பெரும் சூறாவளிக் காற்றுத் தாக்குதல், 2001 இல் பெரும் பூகம்பம், 2002-2003 இல் வறட்சி மற்றும் எண்ணெய் நெருக்கடி, இரண்டாம் கல்ஃப் போர் என பல தாக்கங்கள்.. ஆனால், ஒருபோதிலும் இவை அனைத்தும் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் வாஜ்பாய்.
நாட்டின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதைப் பெற்றுள்ள வாஜ்பாய், நான்கு வெவ்வேறு மாநிலங்களிலிருந்து (உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், டெல்லி) வெவ்வேறு காலங்களில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நாடாளுமன்ற, மக்கள் பிரதிநிதியாகத்
திகழ்ந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக