1. அமெரிக்கா
- தென் கொரியா நாடுகளின் கூட்டு இராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போரைத் தூண்டி
விடும் என, வடகொரியா எச்சரித்துள்ளது.
2.தென் அமெரிக்க நாடான பெருவில், நேற்று,
ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளிகள் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில்,60 பேர்
காயமடைந்தனர்.
3.ஜப்பானின் மக்கள் தொகை
குறைந்து கொண்டே வருவதாகவும், 2060 ஆம் ஆண்டு, தற்போதைய
மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு குறைந்து, 8 கோடியே 67 லட்சமாக ஆகி விடும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
4. பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட்
மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல், அசம்பாவிதங்கள்
எதுவுமின்றி அமைதியாக நடந்து முடிந்தது. பஞ்சாபில் 80 விழுக்காடு வாக்குகளும்,
உத்தரகண்டில்,70 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின.
5.எந்த அரசு பதவியையும் வகிக்கக் கூடாது என,
தனக்கும், மற்ற மூன்று
விஞ்ஞானிகளுக்கும் அரசு சார்பில் விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன்
நாயர், பிரதமருக்குக் கடிதம்
எழுதியுள்ளார்.
6. சங்க இலக்கியத்தில் பெருமை
பெற்ற புறநானூற்றுப் பாடல்கள் அடங்கிய ஆங்கில மொழி பெயர்ப்பு நூல், திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் சிறப்பாக வெளியிடப்பட்டது.
7. புயலால் ஏற்பட்ட பாதிப்பை போக்க, இடைக்கால நிவாரண நிதியாக ` 500 கோடி மத்திய அரசு வழங்கியதற்கு, தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது.
8.தானே புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான கடலூர், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், `1000 கோடி செலவில், 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று ஆளுநர் உரையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
9. இன்றைய மாணவர்கள், எதிர்காலத்தில் முதியோர் இல்லங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்
என, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்.
10. சர்வதேச டென்னிஸ் மகளிர்
இரட்டையர் தரவரிசையில், இந்தியாவின் சானியா மிர்சா, மிக அதிகபட்சமாக 7ஆவது இடத்துக்கு
முன்னேறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக