16 மார்ச், 2012

17/03/2012


1. லிபியாவில் கடந்தாண்டு நடந்த மக்கள் புரட்சியின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி, ஐ.நா  பொதுச் செயலர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
2. கடந்த 244 ஆண்டுகளாக உலகின் மிகப் பிரபலமான குறிப்புதவிப் புத்தகமாக விளங்கி வரும், "என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' தனது புத்தக வடிவ வெளியீடுகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது.
3.மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கு,புதிய வரவுசெலவுத் திட்டத்தில், வருமான வரி விலக்கு வரம்பில் 20 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு, 2 இலட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
4. விண்வெளிக்கு செய்மதியைக் கொண்டுசெல்லும் நெடுந்தூர ஏவுகணை ஒன்றை ஏவவுள்ள வடகொரியாவின் திட்டத்தால் மேற்குலக அணி நாடுகள் கவலை அடைந்துள்ளன.
5. ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவந்த ,இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இலங்கையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டணி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 
6.  லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தயாராவோம் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
7. கட்டாய தலைக்கவசம் நடைமுறைபடுத்தப்பட்டதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
8. சங்கரன்கோவில் தொகுதியில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
9. கிரிக்கெட் வரலாற்றில் 100ஆவது சதத்தை அடித்து சாதனை நிகழ்த்தியுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10. ஆசிய கோப்பை மட்டைப்பந்துத் தொடரின் தகுதி ஆட்டத்தில், இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வீழ்த்தியது.

15 மார்ச், 2012

16/03/2012


1. இலங்கை இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தின் மீதான விவாதத்தில், இலங்கைக்கு எதிராக 8 நாடுகள் விவாதம் செய்தன.
2.  ஜிம்பாப்வேயில் நிலவிவரும் நிதிப்பற்றாக்குறையால், இங்கு விரைவில் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜிம்பாப்வே நிதியமைச்சர் டெண்டாய் பிட்டி கூறியுள்ளார். 
3.மும்பைத் தாக்குதல் தொடர்பாக விவகாரத்தில், விசாரணை நடத்தி அறிக்கை பதிவு செய்ய, பாகிஸ்தான் நாட்டின் நீதித்துறை கமிஷனைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு மும்பை வந்தது.  
4. உத்தரப்பிரதேச மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு, நிர்வாகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். 
5. தமிழக மக்களவை உறுப்பினர்கள் பற்றி விமர்சனம் செய்ததற்காக டெல்லியில் உள்ள இலங்கை தூதர் கரியவாசம் மன்னிப்பு கேட்டார்
6.இந்தியாவின் வரவு செலவுத் திட்டம், இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியால், முன் வைக்கப்படுகிறது.
7.த்தரப்பிரதேசத்தில், நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறிய வகைக் கணினி வழங்கப்படும் என அம்மாநில முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். 
8. அன்னா ஹசாரே குழுவின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து, குழு உறுப்பினர்களுடன் ஹசாரே இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 
9. ஆசியக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
10. இந்தியன் வேல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பயஸ் - செக் குடியரசின் ராடேக் ஸ்டெபனெக் இணை தோல்வி அடைந்து வெளியேறியது.

14 மார்ச், 2012

15/03/2012


1. சீனா பெற்று வரும் பொருளாதார நன்மைகளைப் பாதுகாக்க மேலும் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை என்று அந்நாட்டின் பிரதமர் வென் ஜியா போ கோரியுள்ளார்.
2. தி ஹேகிக்கிலிருந்து செயல்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், காங்கோவின் கிளர்ச்சிக் குழுவின் தலைவரான தாமஸ் லுபாங்கா, போர்க் குற்றங்கள் புரிந்தார் என்று தனது முதல் தீர்ப்பில் கூறியுள்ளது.
3. ஜப்பானின் ஹோக்காய்டோ தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாகப் பதிவானது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. 
4. மத்திய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்கள் மற்றும் சலுகைகளைப் பறித்து ஒழுங்குமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5. கடந்த மூன்று ஆண்டுகளில் 700 பாகிஸ்தானியர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. 2012--13 ஆண்டிற்கான தொடர்வண்டி வரவு செலவுத் திட்ட்த்தில், அனைத்து வகைப் பயணச் சீட்டுக்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ள. 
7. காய்கறி மற்றும் புரதச்சத்துப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் 6.95 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
8. மத்திய கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயம் செய்த 260 லட்சம் டன் குறியீட்டு இலக்கை கடந்து வஉசி., துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
9. கோயமுத்தூர் காந்திபுரம் பகுதியில், விரிவான,ஒருங்கிணைந்த பேருந்து நிறுத்தமும், பல்லடுக்கு வாகன நிறுத்த வளாகமும் கட்டி, நகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
10. அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியன வேல்ஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக் குடியரசின் ராடேக் ஸ்டீபனெக் இணை காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

13 மார்ச், 2012

14/03/2012


1. வட மற்றும் தென் கொரிய நாடுகளின் இடையே உள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு இம்மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா செல்ல உள்ளார். 
2. உலகம் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்னை விசுவரூபம் எடுத்து வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பெரும் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. இலங்கையில் போர் முடிந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இன்னும், மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாக,அம்னஸ்டி இண்டர்நேசனல் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
4. கிங்பிர் விமான நிறுவனத்துக்கு புதிதாக கடன் வழங்கும் திட்டமில்லை, என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். 
5. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக உ.பி., மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி மனுத்தாக்கல் செய்தபோது, தனக்கு  . ` 111 கோடி அளவிற்கு சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
6. 2012-2013 ஆம் ஆண்டிற்கான மத்திய தொடர்வண்டி வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படுகிறது.
7. சித்த, ஆயுர்வேத கல்லூரிகளை ஒரு வாரத்திற்குள் தொடங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 
8. கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. 
9. ` 731.151 கோடி மதிப்பிலான கோவை மாநகராட்சியின் வரவு செலவுத் திட்டத்தில் ` 27.71 கோடி அளவிற்கு பற்றாக்குறை உள்ளதாக மாநகரத் தந்தை அறிவிப்பு.
10. ஆசியக்கோப்பை மட்டைப்பந்துத் தொடரில், இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையை 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது,

12 மார்ச், 2012

13/03/2012


1. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள, அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் அருகில் உள்ள கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 16 பேர் பரிதாபமாக பலியாயினர். 
2. அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், தற்போதைய அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
3. தலிபான்கள் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுடன், சமாதான பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு இன்று அழைப்பு விடுத்துள்ளது. 
4. உத்தரகாண்ட் முதல்வராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் பகுகுணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5.  உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி இருந்தபோதிலும், இந்தியாவின் பொருளாதாரம் உறுதியாக உள்ளது என்று, குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
6. ஓசோன் படலம் எவ்வாறு அமைந்துள்ளது, சுற்றுச்சூழல் பாதிப்பின்மூலம் அது எவ்வாறு தேய்வடைகிறது என்பதை விளக்கி, வேதியியலுக்கான நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர், எஃப் ஷேர்வூத் ரெளலண்ட் காலமானார். 
7. அணுமின் நிலைய பாதுகாப்பு விஷயத்தில், எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தெரிவித்தார்.
8. காஷ்மீரின் வடமேற்கில் உள்ள கில்ஜித்தை மையமாகக்‍ கொண்டு,நேற்று முற்பகல் ஏற்பட்ட நிலநடுக்‍கம், ரிக்‍டர் அளவுகோலில், 5.6ஆக பதிவானது.
9.  தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
10. இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், சர்வதேச டென்னிஸ் போட்டியில் தனது 600ஆவது வெற்றியைப் பதிவு செய்தார். 

Free Code Script

12/03/2012


1. ஜப்பானில், 16 ஆயிரம் பேரை பலிவாங்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் முதலாண்டு நினைவு நாள், நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. 
2.  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ந்துக்களை வலுக்கட்டாயமாக முஸ்லிம்களாக மதமாற்றம் செய்வது அதிகரித்துள்ளதாக,பாகிஸ்தானுக்கான மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
3.  சீனாவின் விண்வெளி நிறுவனம், 2015 ஆம் ஆண்டுக்குள் 100ஏவுகணைகள், செயற்கைக் கோள்களை ஏவத் திட்டமிட்டுள்ளது.
4. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
5. பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
6.  நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
7. இந்தியாவில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ` 10 ஆயிரம் கோடிக்கு மேல் பெறுகின்றன.
8. உத்தரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
9.  நிலநடுக்கம், சுனாமி, அணுமின் நிலைய விபத்து ஆகிய மூன்று பேரழிவுகளிலிருந்தும் மீண்டு, ஜப்பான் ஓராண்டுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக, சென்னையிலுள்ள ஜப்பான் துணைத் தூதர் தெரிவித்தார்.
10.  ஆசிய கோப்பை மட்டைப்பந்துப்போட்டியின் முதல் ஆட்டத்தில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.

8 மார்ச், 2012

09/03/2012


1. சிரியாவில்,எந்தவொரு வெளிநாட்டு இராணுவத் தலையீடும், நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று, சிரியாவுக்கான தூதுவரான கோபி அனான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. ஈரான் தனது அணுசோதனை குறித்து வல்லரசு நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்குச் சம்மதம் தெரிவித்திருப்பதற்கு, இஸ்ரேல் வரவேற்புத் தெரிவித்துள்ளது.
3. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது பிராந்தியச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்று இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
4. ஐ. நா.வின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை குறித்த ஒரு தீர்மானம் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
5.  ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில்,அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தின் மீது, இந்தியா, தமிழர்களின் நலனை மனதில் கொண்டு, ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என,மைய அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.
6. அரசியலில் பங்கேற்கும் மகளிர் அதிகம் கொண்ட நாடுகள் எது என்ற பட்டியலில், உலக அளவில் இந்தியாவுக்கு 105 ஆவது இடம் கிடைத்திருக்கிறது. 
7. நாட்டின் எல்லைப்பாதுகாப்பு படையைத் தரம் உயர்த்த, `11 கோடி செலவில் நவீன வகை போர்விமானங்கள், உலங்கு வானூர்திகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
8. அரசு அலுவலர்கள் 100 விழுக்காடு தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்.
9. இக்கட்டான போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி,அணியைக் காக்கும் டிராவிட்டின் ஓய்வு, இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும் என நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
10. ஆஸ்திரேலியாவில நடைபெற்ற, காமன்வெல்த் வங்கி முத்தரப்பு மட்டைப்பந்துத் தொடரின்  இறுதிப் போட்டியில், இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

7 மார்ச், 2012

08/03/2012


1. தான் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரான்சுக்குள் குடியேறுகின்ற வெளிநாட்டினரின் எண்ணிக்கையை பாதியாய்க் குறைக்க திட்டங்கள் வைத்துள்ளதாக அதிபர் நிகோலா சர்கோசி பரப்புரை.
2. பாகிஸ்தானிடம்,90 முதல் 110 அணுஆயுதங்கள் வரை உள்ளதாக, அணு ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச இயக்கம் தெரிவித்துள்ளது.
3.1912ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு சந்திரனின் அதிக ஒளி வீச்சே காரணம் என தெரிய வந்துள்ளது.
4. மாலத்தீவில், நஷீத் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு, தான் காரணமல்ல என அந்நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி கயூம் கூறியுள்ளார். 
5. பாலக்காடு பிளாச்சிமடையில் செயல்பட்டு வந்த, தனியார் குளிர்பான நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய மாநில அரசுகள் நிவாரணம் வழங்கவேண்டும் - சமூகசேவகி மேதாபட்கர் கோரிக்கை.
6. கடந்த இரு மாதங்களாக உயர்த்தப்படாமல் இருக்கும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ` 5 வரை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தத் தொடங்கியிருக்கின்றன.
7. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலை சுற்றி ` 3.80 கோடியில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளதாக தேவஸ்தான தலைமைச் செயல் அதிகாரி அறிவிப்பு.
8. மகளிர் தினத்தையொட்டி, ஏர் இந்தியா நிறுவனம் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் 3 விமானங்களில் முழுவதும் பெண் ஊழியர்களையே பணிக்கு நியமித் துள்ளது.
9. அடுத்த ஆண்டுமுதல் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், அவ்வையார் விருது என்னும் உயரிய விருது ஒன்றை சிறந்த பெண்மணி ஒருவருக்கு, சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கிட தமிழகமுதல்வர் ஆணை.
10. ஆஸ்திரேலியா,இலங்கை அணிகள் மோதும் 3ஆவது இறுதி மட்டைப்பந்துப் போட்டி அடிலெய்டில் இன்று நடக்கிறது.

6 மார்ச், 2012

07/03/2012


1. சீனாவில் ஏற்றுமதி அளவு குறைந்து,மொத்த வளர்ச்சி அளவும் கடந்த ஏழு ஆண்டுகளாக இல்லாத வகையில் குறைந்தது. 
2. ஈரான் அ‌திபர் மெகமூத் அகமதுநிஜத், ரஷ்ய அதிபர் ‌தேர்தலில்,புடின் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்..
3.  உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதிக் கட்சியும், பஞ்சாபில் சிரோமணி அகாலிதளக் கூட்டணியும்,உத்தரகண்டிலும்,கோவாவிலும்,பாரதிய ஜனதாக் கட்சியும், மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கின்றன.
4. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில், இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று வெளியான தகவல்களை,மத்திய அமைச்சர் நாராயணசாமி மறுத்துள்ளார்.
5. இந்தியாவில் மட்டுமே சுமார் 60 கோடிப் பேர் இன்னும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருப்பதாக ஐ.நா அவை தெரிவித்துள்ளது.
6.  இந்தியாவில் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்று,உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்தினை மறுபரிசீலனை செய்யக்கோரும் மனுவை, தேவைப்பட்டால் தாக்கல் செய்வோம் என்று,கேரள அரசு கூறியுள்ளது. 
7. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மேம்படுத்தப்பட்ட கணினிப் படிப்பை வழங்கவும், தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகத்தை மேம்படுத்தவும், தமிழக அரசுடன் மைக்ரோசாப்ட் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளது.
8. தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்த தொகை 140 கோடியே 39  இலட்சம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
9. ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிப்பதோடு, இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்' என்று, பிரதமருக்கு மீண்டும் தமிழக முதல்வர் கடிதம்.
10. முத்தரப்பு மட்டைப்பந்துத் தொடரின் இரண்டாவது இறுதிப்போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 

5 மார்ச், 2012

06/03/2012


1.ரஷ்யாவில் மூன்றாவது தடவையாக, விலாடிமீர் புடின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்யும்படி, சர்வதேசக் காவல்துறைக்கு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
3. இந்தியா-பாகிஸ்தான், இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்த, பாகிஸ்தான் பிரதமர் கிலானி முக்கிய பங்கு வகித்துள்ளார் என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 
4. தில்லியின் மேற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில், ஹரியானா மாநிலத்தில் உள்ள பஹாதுர்கா என்ற இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.9 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
5. விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருக்கும் இஸ்ரேல் நாட்டு பெண் ‌எழுத்தாளரை நாடு கடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
6. மாநிலங்களவையில் 58 உறுப்பினர்களின் பதவிகாலம் அடுத்த மாதம் ஏப்ரலில் முடிவடைவதையொட்டி, அந்த இடங்களுக்கான தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
7. மதுரை மாநகராட்சியில் கொசுத்தொல்லையை ஒழிக்கும் விதமாக, ஒரு லட்சம் வீடுகளுக்கு இலவச கொசு வலை வழங்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
8. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைத்தொகுதிகளின் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
9. பாட்னா நகரில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இரானிய மகளிர் அணியை 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய மகளிர் வீழ்த்தினர்.
10. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும், முத்தரப்பு மட்டைப் பந்துப் போட்டியின் இரண்டாவது இறுதிப் போட்டியில், இலங்கை அணியும், ஆஸ்திரேலிய அணியும் இன்று மோதுகின்றன.

Free Code Script

05/03/2012


1. நேற்று நடைபெற்ற ரஷிய அதிபர் பதவிக்கான தேர்தலில், விளாடிமிர் புதினுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
2. இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரசாரத்தின்போது மகாத்மா காந்தியையும், நெல்சன் மண்டேலாவையும் நினைவு கூர்ந்தார்.
3.  சீனாவின் இராணுவச் செலவினம், இந்த ஆண்டு பத்தாயிரம் கோடி டாலர்களைத் தாண்டியுள்ளது.
4.  இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் விக்ரம் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
5. தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 40 கோடி பேரின் விவரங்களை பதிவு செய்யும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று தேசிய அடையாள அட்டை ஆணையத்தின் தலைவர் நந்தன் நைல்கேணி தெரிவித்தார்.
6. திருப்பதி கோயிலில் பல்வேறு இனங்களின் வரவு- செலவுகள் மூலம் இந்த ண்டு `2010 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
7. பெங்களூரு நீதிமன்றத்தில்,பத்திரிகையாளர்களைத் தாக்கியதாக, ஐந்து வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். 25 ழக்கறிஞர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
8. இலங்கை தமிழர்களின் குழந்தைகள் விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கான திட்டத்தின் கீழ்,இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
9. கடற்படை பாதுகாப்புடன் கச்சத் தீவு அந்தோனியார் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் இந்தியா, இலங்கையை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10. பிரிஸ்பேனில் நடந்த முத்தரப்பு மட்டைப்பந்துப் போட்டி,ஒருநாள் தொடரின் முதல் இறுதியில்,ஆஸ்திரேலிய அணி, இலங்கையை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

Free Code Script

1 மார்ச், 2012


1. உலக அளவில், ஏழைக் குழந்தைகளின் நிலை, கிராமங்களை விட நகரங்களில்  கவலையளிக்கும் வகையில் உள்ளதாக ஐ.நா. மன்றத்தின், குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
2. மாலத்தீவின் உள்விவகாரங்களில் தலையிடவில்லை; அதிபர் கேட்டுக் கொண்டதால் மத்தியஸ்தம் செய்யும் பணியை மட்டுமே செய்கிறோம் என்று இந்தியா விளக்கமளித்துள்ளது.
3. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்குமாறு, இந்தியாவை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
4. பிரம்மபுத்திரா நதி திடீரென வற்றியதால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில், பொருளாதார ரீதியான பிரச்சினைகளும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.கே. கிரிமே கூறியுள்ளார்.
5. மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதை அடுத்து, நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகள் அதிகரிக்க உள்ளன.
6. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படுவது உறுதி என்று கேரள சட்டப்பேரவையின் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. 
7. வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் தகுதி வாய்ந்த ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில், செமஸ்டர் அப்ராட் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு மாநில உயர் கல்விக் கவுன்சில் அறிவித்துள்ளது.
8. உலக ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ்” 24 நாடுகளில் எடுத்த கணக்கெடுப்பில், உலகில் மகிழ்ச்சியாக வாழும் மக்களில்,இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
 9. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் 27 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 13 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
 10.ஆசிய கோப்பைக்கான இந்திய ஒருநாள் மட்டைப்பந்து அணியில், மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.


Free Code Script

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...