11 ஆகஸ்ட், 2011

இங்கிலாந்தில் அமைதி திரும்பட்டும் ; சோமாலியாவில் உணவுப் பஞ்சம் தீரட்டும்

எழுதப் படாத சட்டங்களைக் கொண்டு, தங்களது மரபுகளையே வாழ்க்கையாகக் கொண்டு வாழும் ,உலகின் மிகச் சிறந்த மக்களாட்சி நாடுகளுள் சிறந்த நாடாகவும் இருக்கும் இங்கிலாந்தில் கலவரம்,வன்முறை, சூறையாடல், போன்ற செய்திகளைக் காணவும், கேட்கவும் மனம் வருந்துகிறது.சூரியன் மறையாத ஆட்சியைக் கொண்டிருந்த இந்நாடும் ,இந்நாட்டு மக்களும்,இன்று படும் வேதனையைச் சொல்லி மாளாது.பொது மக்கள் என்ன பாவம் செய்தனர்? ஒன்றுமறியா அப்பாவிகள் இவ்வாறு அல்லல் படுவது யாராலும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று! சோமாலிய நாட்டிலோ இன்னுமொரு கொடுமை!உணவின்றி தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மாண்டுபோகின்றனர்.மனிதத் தன்மை உள்ள எந்த ஒரு நாட்டவரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.உணவு அளிக்க ஐ.நா அவையும் ,மற்ற நாடுகளும் தயாராக இருந்தாலும் அதை மக்களுக்கு அனுமதிக்கவோ, அதை அவர்கள் பெற்றுக்கொள்ளவோ. அந்நாட்டில் இருந்து செயல்படும் தீவிரவாதக்குழுக்களும்,இராணுவமும் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மக்கள் சமுதாயம் இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல இருப்பது, மனித சமுதாயம் மனிதத்தன்மையை இழந்து வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது....

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...